தமிழ்நாட்டுக்கே ஹேப்பி.. இந்தியாவிலேயே முதன்முறையாக ஓடப்போகும் "நவீன ரயில்".. சென்னை "ஐசிஎப்" அபாரம
சென்னை: ரயில் தயாரிப்புகளில், சென்னை ஐசிஎப் நிறுவனமானது, தேசிய அளவில் கவனத்தை தன்பக்கம் திருப்பி வருகிறது. இப்போது மகிழ்ச்சி செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்பட்டு வருகின்றன.. இதுபோலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தடுத்த வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, சேவைகளையும் தொடங்கி உள்ளன.
அதுபோலவே, ஆரஞ்சு நிற வந்தே பாரத் நெல்லை-சென்னை ரூட்டில் தான் இயங்கும் என்கிறார்கள். இதுபோக, குறைந்த கட்டணத்தில் "சாதாரண் வந்தே பாரத்" வரப்போவதாக சொல்லி வருகிறார்கள்.

ஐசிஎப் சாதனை: ஆனால், அடுத்த 5 வருடங்களில் வந்தே பாரத் ரயில், 100 சதவீதமும் இந்தியாவில் தயாராகும் என்று குட்நியூஸ் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சமீபத்தில், ஐசிஎப் பொதுமேலாளர் மால்யா செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவலை பகிர்ந்திருந்தார்.
அதாவது, "உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக, ஐசிஎப் திகழ்கிறது.. வருடத்துக்கு சராசரியாக, 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை, 71,000 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று 14 நாடுகளுக்கு, ரயில் பெட்டிகளை ஐசிஎப் ஏற்றுமதி செய்கிறது.
பாதுகாப்பு: வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது.. பாதுகாப்பு, வேகம், வசதி, செயல் திறன் ஆகியவற்றில் வந்தே பாரத் ரயில் முதலிடத்தில் உள்ளது. இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டிருந்தார்.
புதிய சாதனை: அந்தவகையில், இப்போதும் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, பயணிகள் ரயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியிருக்கிறது.
அதாவது, இந்தியாவிலேயே முதல் முறையாக 'புஷ்-புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்றிருக்கின்றன. 2 என்ஜின்கள் இருப்பதால், இந்த ரயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும்.

ஏசி இல்லாத 22 பெட்டிகள், 3 அடுக்கு தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகள், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் என அனைத்துமே இந்த ரயிலில் தயாராகி உள்ளது.
மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.. பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக நீண்ட தூர வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ரயில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
விரைவில் ஓட்டம்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, வந்தே பாரத் போன்ற ரயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதை இந்த புதிய ரெயில் நோக்கமாக கொண்டிருக்கிறது.. இந்த ரயில் பெட்டிகளை தொழில்நுட்ப அமைப்பினர் விரைவில் ஆய்வு செய்ய போகிறார்கள்.. அடுத்த சில மாதங்களில், இந்த ரயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்படும்.. அதற்கு பிறகே, பயணிகளுக்கு அதிக தேவை உள்ள இடங்களுக்கு இந்த ரயில் சேவை அறிமுகமாகும்" என்றார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications