விண்வெளியில் செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பும் சோதனை! தமிழக அரசுடன் இணைந்து.. அசத்தும் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று விண்வெளியில் 16 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்புகிறது. இதில் தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் செயற்கைக்கொளும் ஒன்று. இந்த செயற்கைக்கோளுக்கு விண்வெளியில் எரிபொருள் நிரப்பி சோதனை செய்யப்படுகிறது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோளுக்கு 'ஆயுள்சாட்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஆர்பிட் எய்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளது.

ISRO Tamil Nadu space

தமிழக அரசு நிதியுதவி

பொதுவாக செயற்கைக்கோள்களில் எரிபொருள் தீர்ந்து விட்டால், அவை செயலிழந்து விண்வெளிக் குப்பைகளாக மாறும். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் விண்ணிலேயே அவற்றுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்ப முடியும் என்பதே இதன் சிறப்பு. தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் டிஎன்' மற்றும் TANSIM அமைப்புகள் மூலம் இந்த நிறுவனத்திற்கு, சுமார் ₹4.86 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த 'ஆயுள்சாட்டை' செயற்கைக்கோள் என்று சொல்வதை விட, செயற்கைக்கோள் எரிபொருள் டேங்கர் என்று சொல்லலாம். இந்த டேங்கர், விண்வெளியில் எரிபொருள் தீர்ந்து போன செயற்கைக்கோள்களுக்கு எரிபொருளை நிரப்பும்.

செயற்கைக்கோளும் எரிபொருளும்

விண்வெளியை பொறுத்தவரை, நாம் செயற்கைக்கோளை ஏவி விட்டால், அது தொடர்ந்து பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியில்லை, பூமியின் ஈர்ப்பு விசை எல்லா இடங்களிலும் சீராக இருக்காது. எனவே, செயற்கைக்கோள் தனது பாதையிலிருந்து விலக நேரிடலாம். அப்படி ஆகாமல் இருக்க, சிறிய பூஸ்டர்கள் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருக்கும். செயற்கைக்கோள் பாதையிலிருந்து விலகும் போது, பூஸ்டர்கள் இயக்கப்பட்டு, பாதை சரி செய்யப்படும்.

விண்வெளி குப்பை

மட்டுமல்லாது விண்வெளியில் குப்பைகள் அதிகம். இந்த குப்பைகள் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட அதிக வேகத்தில் பறந்து கொண்டிருக்கும். அதில் செயற்கைக்கோள் மோதி விடக்கூடாது. எனவே, குப்பைகள் நெருங்கும்போது செயற்கைக்கோள்களை நகர்த்த சிறிய பூஸ்டர்கள் பயன்படுகின்றன. அதேபோல செயற்கைக்கோள் தனது வாழ்நாளை முடித்துவிட்டது எனில், பூமிக்குள் விழுந்துவிடாமல் இருக்க, அதை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கும் இந்த பூஸ்டர்கள் தேவை.

ஆயுள்சாட் பணி

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்களில் 5-7 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருள் இருக்கும். அதன் பின்னர் அந்த செயற்கைக்கோள்கள் குப்பைகளாக மாறிவிடும். இப்படி எக்கச்சக்கமான குப்பைகள் விண்வெளியில் இருக்கின்றன. இது எதிர்காலத்தில் ராக்கெட் ஏவுவதற்கு தடையாக இருக்கிறது. எனவே இப்படியான குப்பைகளை சேரவிடாமல் தடுக்க.. எரிபொருளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க, ஆயுள்சாட் டேங்கர் பயன்படுகிறது.

கிராமப்புற விஞ்ஞானி

இந்த டேங்கர் செயற்கைக்கோளை தயாரித்துள்ள 'ஆர்பிட் எய்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்திற்கு தான் தமிழக அரசு நிதியுதவி செய்துள்ளது. தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கலூர் எனும் கிராமத்தை சேர்ந்த விண்வெளி பொறியாளர் சக்திகுமார் என்பவர்தான் இந்த நிறுவனத்தை உருவாக்கி, நடத்தி வருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் மற்றொரு செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. அது, விண்வெளியில் இந்த ஆயுள்சாட் செயற்கைக்கோள் உடன் இணைந்து, தானாகவே எரிபொருளை பெற்றுக்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+