டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே!

Subscribe to Oneindia Tamil

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய ஆதிக்கம் உருவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சர்கள் பட்டியலில் தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளது வரலாற்று நிகழ்வாகும்.

கர்நாடக மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான டி.கே.சிவகுமார் நாட்டின் அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.

Vijay Chandrababu Naidu DK Shivakumar Bengaluru Chennai DK Shivakumar net worth 2026 richest CM in India ranking India wealthiest chief ministers list ADR report richest chief minister DK Shivakumar asset breakdown Chandrababu Naidu vs DK Shivakumar wealth Tamil Nadu CM Joseph Vijay net worth DK Shivakumar real estate properties Lok Bhavan glass house swearing in south Indian richest politicians

கர்நாடக அரசியல்

காங்கிரஸ் மேலிடத்தின் மிக முக்கிய அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக (CLP) டி.கே.சிவகுமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த அரசியல் அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் இன்று (ஜூன் 3, 2026, புதன்கிழமை) மாலை 4.05 மணிக்கு பெங்களூருவில் உள்ள லோக் பவன் கண்ணாடி மாளிகையில் (Lok Bhavan Glass House) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல்

தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ADR நடத்திய மிக விரிவான ஆய்வின்படி, டி.கே.சிவகுமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர் என்ற புதிய பட்டத்தை பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அரசியல் சூழலில், நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிடித்து ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த முக்கியப் பட்டியலில் 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் கர்நாடகாவின் டி.கே.சிவகுமார் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்தார்.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தற்பொழுது மூன்றாம் இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்-ஐ முந்திக்கொண்டு தற்போது டி.கே.சிவகுமார் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

20 ஆண்டுகளில் 18 மடங்கு உயர்வு: டி.கே.சிவகுமாரின் சொத்து ரகசியம் என்ன?

கடந்த இரண்டு தசாப்தங்களாக டி.கே.சிவகுமாரின் அரசியல் செல்வாக்கு எந்த அளவிற்கு உயர்ந்ததோ, அதே அளவிற்கு அவரது சொத்து மதிப்பின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் ராக்கெட் போல எகிறியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வெறும் 75.5 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, பின்னர் ஐந்து ஆண்டுகளில் அதாவது 2013இல் 251 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டில் 840 கோடி ரூபாயாக உயர்ந்த அவரது சொத்துக்கள், இறுதியாகக் கடந்த 2023ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 1,413 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட உச்சத்தைத் தொட்டுள்ளது.

20 ஆண்டுகளில் சுமார் 18 மடங்கு உயர்ந்துள்ள இந்த அசாத்திய சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு, அவரது தந்தை மற்றும் பாட்டியின் உயில் மூலம் அவருக்குக் கிடைத்த பரம்பரை ரியல் எஸ்டேட் சொத்துக்கள், விவசாய நிலங்கள், பல்வேறு நிதி முதலீடுகள் மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் பதிவான நிலத்தின் விலை உயர்வு முதன்மைக் காரணமாகும்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்

டி.கே.சிவகுமாரின் அதிகாரப்பூர்வப் பிரமாணப் பத்திரத் தரவுகளின்படி, அவரின் 1,413 கோடி ரூபாய் ஒட்டுமொத்தச் சொத்துக்களில், நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களின் (Immovable Property) மதிப்பு மட்டுமே சுமார் 1,140 கோடி ரூபாயாகும். இதில் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான விவசாய நிலங்கள், 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான விவசாயம் அல்லாத நிலங்கள், 942 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகக் கட்டிடங்கள் மற்றும் 84 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பு வீடுகள் ஆகியவை அடங்கும்.

குறிப்பாகப் பெங்களூரு, மைசூரு, கனகபுரா மற்றும் நாட்டின் தலைநகரான டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் இவருக்குச் சொந்தமாகப் பிரம்மாண்ட வீடுகளும், பெங்களூரின் கோபால்புராவில் ஒரு மாபெரும் வணிக வளாகத்திற்கான (Mall Site) நிலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதர அசையா சொத்துக்களின் மதிப்பு 11 கோடி ரூபாயாகக் காட்டப்பட்டுள்ளது.

மறுபுறம், அவரிடம் உள்ள அசையும் சொத்துக்களின் (Movable Assets) ஒட்டுமொத்த மதிப்பு 273 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இதில் கையில் உள்ள ரொக்கப் பணம் 4.86 லட்சம் ரூபாய், பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ள கையிருப்பு 14.5 கோடி ரூபாய் மற்றும் இதர நிதி முதலீடுகள் 1.81 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

வங்கி வைப்பு நிதி

அவரது குறிப்பிட்ட வங்கி வைப்பு நிதி விபரங்களின்படி அபெக்ஸ் வங்கியில் 1.35 கோடி ரூபாயும், பாங்க் ஆஃப் பரோடாவில் 1.33 கோடி ரூபாயும், எச்டிஎப்சி வங்கியில் 65 லட்சம் ரூபாயும், பிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதியாக 11.17 கோடி ரூபாயும் உள்ளது.

தங்கம் மற்றும் வாகனம்

வாகனங்களைப் பொறுத்தவரை 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு டொயோட்டா குவாலிஸ் கார் மட்டுமே அவரிடம் உள்ளது. நகைகளைப் பொறுத்தவரை 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம், 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வெள்ளி மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வைர நகைகளும், மற்ற இதர நகைகள் 1 கோடி ரூபாய்க்கும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

453 கோடி ரூபாய் கடன்

இந்த பிரம்மாண்ட சொத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், டி.கே.சிவகுமாருக்கு சுமார் 453 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்கள் உள்ளது. இதில் அதிகாரப்பூர்வமாகக் காட்டப்பட்டுள்ள கடன்களின் விபரங்களின்படி, டிவினிட்டி ஸ்பேசஸ் எல்எல்பி கடன் கணக்கில் (Divinity Spaces LLP Loan A/C) 58 கோடி ரூபாயும், செல்வி ஐஸ்வர்யா டிவிகேஎஸ் வசம் 38 கோடி ரூபாயும், திருமதி கௌரம்மாவிடம் 18 கோடி ரூபாயும், திருமதி உஷா சிவகுமாரிடம் 17 கோடி ரூபாயும் கடன் பொறுப்புகள் உள்ளன.

இவற்றுடன் அமேதிஸ்ட் ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முன்பணமாகப் பெற்ற 60 லட்சம் ரூபாயும் இந்த ஒட்டுமொத்த கடன் பொறுப்புப் பட்டியலில் அடங்கும். மற்றொரு கணக்கீட்டின்படி அவரது ஒட்டுமொத்தக் கடன் பொறுப்புகள் 265 கோடி ரூபாய் என்ற அளவிலும் காட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+