Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னைக்கு ஒரு புடி.." 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 உணவுகள்.. லிஸ்டில் 3 தமிழக உணவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 உணவுகள் குறித்த லிஸ்ட்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டாப் இடத்தில் தமிழ்நாட்டின் உணவான இட்லி இருக்கிறது. இட்லி மட்டுமின்றி மொத்தம் 3 தமிழக உணவுகள் இந்த லிஸ்டில் இடம்பிடித்து இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தாண்டு கடைசிக்கு நாம் வந்துவிட்டோம். கடந்த 11 மாதங்களில் உலகில் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. இதற்கிடையே மாதக் கடைசியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்கள் குறித்த லிஸ்ட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலைப் பார்த்தால் நிச்சயம் நமக்கு சர்ப்ரைஸாகவே இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

India s Top 10 Most Googled Foods 2025 Idli Tops the List total of three tamil dishes in the list
Photo Credit:

இட்லி

இதில் முதல் இடத்தில் இட்லி தான் இருக்கிறது.. தென்னிந்தியாவின் பிரபல உணவான இட்லி தான் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட உணவாக இருக்கிறது. புளிக்கவைத்த அரிசி, உளுத்தம் பருப்பு மாவிலிருந்து நீராவி மூலம் தயார் செய்யப்படும் இட்லிக்கு நாடு முழுக்க ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே கூகுள் டிரெண்ட்ஸில் அது டாப் இடத்தைப் பிடித்துள்ளது. சட்னி அல்லது சாம்பாருடன் காலை உணவாகப் பரிமாறப்படும் இட்லி தான் கிங் என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இதில் இரண்டாவது இடத்தில் பார்ன்ஸ்டார் மார்ட்டினி எனப்படும் காக்டெய்ல் இருக்கிறது. வோட்கா, பேஷன்ஃப்ரூட் ப்யூரி கொண்டு தயாரிக்கப்படும் இந்த காக்டெய்ல், ஒரு கிளாஸ் ஒயினுடன் பரிமாறப்படும். இனிப்பு, புளிப்பு கலந்த இதன் சுவை தனித்துவமானது. இதை எப்படிச் செய்வது என்றும் இந்தியர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள்.

மோதக் தெரியுமா

மோதக் இந்த லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை சமயத்தில் பரிமாறப்படும் இந்த இனிப்பு தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.. இந்த மோதக் அரிசி மாவுக்கு உள்ளே தேங்காய், வெல்லம் நிரப்பப்பட்டு ஆவியில் வேகவைக்கப்படும். அட இது நம்ம கொழுக்கட்டை ஆச்சே என உங்களுக்குத் தோன்றும். ஆம் கொழுக்கட்டை தான். வட இந்தியாவில் இதற்கு மோதக் என்று பெயர். இதுதான் இந்தியாவில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட 3வது உணவாகும்.

அடுத்து 4வது இடத்தில் தேக்குவா இருக்கிறது. பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பிரபலமான இந்த இனிப்பு பிஸ்கட், கோதுமை மாவு, வெல்லம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சத் பூஜை சமயத்தில் இந்த தேக்குவா தயாரிக்கப்படும்.

யுகாதி பச்சடி

இதில் 5வது இடத்தில் யுகாதி பச்சடி இருக்கிறது. தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதி அன்று தயாரிக்கப்படும் இந்த சிறப்பு உணவு லிஸ்டில் 5வது இடத்தில் இருக்கிறது. வேப்பம்பூ, வெல்லம், புளி, மாங்காய் போன்ற ஆறு சுவைகளைக் கொண்ட பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இதையும் நமது இந்தியர்கள் ஒரு பிடி பிடித்துள்ளனர்.

லிஸ்டில் 6வது இடத்தில் பீட்ரூட் காஞ்சி வருகிறது. பீட்ரூட், கடுகு, தண்ணீர் கலந்து நொதிக்க வைக்கப்பட்டு பீட்ரூட் காஞ்சி தயாரிக்கப்படுகிறது. புளிப்புச் சுவையைக் கொண்ட இந்தியப் பானமான பீட்ரூட் காஞ்சி, அதன் ப்ரோபயாடிக் பண்புகளுக்காக அறியப்படுகிறது. அதாவது பீட்ரூட் காஞ்சி நமது வயிற்றுக்கும் குடலுக்கும் ரொம்பவே நல்லதாம்.

திருவாதிரைக் களி

திருவாதிரைக் களி இதில் 7வது இடத்தில் இருக்கிறது.. திருவாதிரை சமயத்தில் தமிழ்நாட்டில் பரவலாக இந்த உணவு செய்யப்படும். சிறுதானியங்கள் அல்லது பச்சரிசி உடைத்தலுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. இது இந்த லிஸ்டில் 7வது இடத்தில் இருக்கிறது.

அடுத்து இந்த லிஸ்டில் 8வது இடத்தில் யார்க்ஷயர் புட்டிங்.. பிரிட்டிஷ் உணவான இது, முட்டை, மாவு, பால்/நீர் மாவைக் கொண்டு பேக் செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் பாரம்பரிய சண்டே ரோஸ்டுடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது. இது இந்த லிஸ்டில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

9வது இடத்தில் கோண்ட் கடீரா என்ற உணவு வருகிறது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இது உணவு இல்லை.. சமையலுக்குப் பயன்படும் ஒரு உணவு.. இயற்கையான பிசினான இதைத் தண்ணீரில் ஊறவைத்தால் அது ஜெல்லி போல மாறும். பானங்கள், இனிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலப் பானங்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படும்.

மீண்டும் கொழுக்கட்டை

10வது இடத்தில் கொழுக்கட்டை.. அதான் 3வது இடத்திலேயே கொழுக்கட்டை வந்துவிட்டதே என நீங்கள் நினைக்கலாம். மோதக் என்ற தேடல் 3வது இடத்தில் இருக்கிறது. கொழுக்கட்டை என்று நேரடியாகவே தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தையைப் போட்டுத் தேடியவர்கள் 10வது இடத்தில் இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் இட்லி, திருவாதிரைக் களி மற்றும் கொழுக்கட்டை எனத் தமிழகத்தைச் சேர்ந்த 3 உணவுகள் இந்த லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+