சென்னை-கொல்கத்தா இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. புகை, பயங்கர சத்தத்தால் பீதியடைந்த பயணிகள்
சென்னை: சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற, இண்டிகோ விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு பயங்கர சத்தம் உருவான சம்பவம் இப்போது அம்பலமாகியுள்ளது.
இண்டிகோ ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும், பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜனவரி 3ம் தேதி சென்னையிலிருந்து, இருந்து இண்டிகோ ஏர்பஸ், கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. அப்போது நடுவானில், திடீரென இன்ஜின் பிளேடு பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பயங்கர சத்தம் எழுந்ததாகவும், புகை கிளம்பியதாகவும், பயணிகளை இது பீதிக்குள்ளதாக்கியதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜின் கோளாறையடுத்து, விமானம் மறுபடியும், சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து, தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ப்ராட் & ஒயிட்னி நிறுவனம்தான், இந்த விமானத்திற்கான இன்ஜினை சப்ளை செய்தது. ஏ320நியோ, வகை விமானம், முதல் முறையாக, இப்படியான பலவகையான பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
புகை, அதிக அதிர்வு, சப்தம் போன்றவை ஒரே நேரத்தில் எழுந்தது இதுதான் முதல் முறை என்பதால், விசாரணை நிறைவடையும்வரை, விமான இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புதிதாக இன்ஜின் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்கலாமா என்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து அறிந்ததும், விபத்து விசாரணை அமைப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலையம் விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். டிசம்பர் 10ம் தேதி ஜெய்ப்பூர்-கொல்கத்தா நடுவேயான இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது தொடர்பாகவும், இந்த அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications