சென்னையில் இருந்து இண்டிகோ தரும் இனிப்பான செய்தி.. வெளியான சூப்பர் அட்டவணை
சென்னை: 2026-ஆம் ஆண்டின் குளிர்காலப் பருவத்தையொட்டி சென்னையிலிருந்தான தனது உள்நாட்டு விமானச் சேவைகளில் இண்டிகோ நிறுவனம் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. நவிமும்பை, மதுரை, கோவை, சேலம், கொச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
இந்தியாவின் முக்கியமான விமான நிலையம் ஒன்றான சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இண்டிகா நிறுவனம் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திற்குமான விமான சேவைகளை விமான நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் குளிர்காலத்திற்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் சென்னைக்கு அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

அதிகரிக்கப்பட்டுள்ள சேவைகள்:
* ஹூப்ளி: வாரத்திற்கு 3 முறை புதிய ஏடிஆர் 72 (ATR 72) விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
* பெங்களூரு: தினசரி 7.5 ஆக இருந்த சேவைகள், இனி தினசரி 10 ஆக அதிகரிக்கப்படுகின்றன (அனைத்தும் ஏ321என் ரக விமானங்கள்).
* நவி மும்பை: வாரத்திற்கு 9 ஆக இருந்த சேவைகள் 14 ஆக அதிகரிக்கப்படுகின்றன.
* மதுரை: தினசரி 3 ஆக இருந்த சேவைகள் 4 ஆக உயர்த்தப்படுகின்றன.
* புவனேஸ்வர்: தினசரி 1 ஆக இருந்த சேவை இனி 2 ஆக உயர்த்தப்படுகிறது.
* ஹைதராபாத்: தினசரி 8 ஆக இருந்த சேவைகள் 9 ஆக அதிகரிக்கப்படுகின்றன.
* கோயம்புத்தூர்: வாரத்திற்கு 49 ஆக இருந்த சேவைகள் 54 ஆக உயர்த்தப்படுகின்றன.
* ஜெய்ப்பூர்: வாரத்திற்கு 7 ஆக இருந்த சேவைகள் 9 ஆக அதிகரிக்கப்படுகின்றன.
* சேலம்: தினசரி 1 ஆக இருந்த ஏடிஆர் 72 சேவை, இனி தினசரி 2 ஆக உயர்த்தப்படுகிறது.
* போர்ட் பிளேர்: தினசரி 2 ஆக இருந்த சேவைகள் 3 ஆக உயர்த்தப்படுகின்றன.
* கொச்சி: வாரத்திற்கு 35 ஆக இருந்த சேவைகள் 40 ஆக அதிகரிக்கப்படுகின்றன.
* விசாகப்பட்டினம்: வாரத்திற்கு 14 ஆக இருந்த சேவைகள் 19 ஆக உயர்த்தப்படுகின்றன.
குறைக்கப்பட்டுள்ள சேவைகள்:
* கொல்கத்தா: வாரத்திற்கு 53 ஆக இருந்த சேவைகள் 49 ஆகக் குறைக்கப்படுகின்றன.
* அகமதாபாத்: வாரத்திற்கு 23 ஆக இருந்த சேவைகள் 20 ஆகக் குறைக்கப்படுகின்றன.
* சூரத்: வாரத்திற்கு 4 ஆக இருந்த சேவைகள் 2 ஆகக் குறைக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
