விமான பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இண்டிகோ! நாளை முதல் டிக்கெட் ரேட் உயர்த்தப்படுகிறது!
சென்னை: விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாளை முதல் விமான கட்டணம் உயர்த்தப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் விமான பயணிகள் அதிர்ச்சியைடந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை 14% வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் புதிய முன்பதிவுகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. இந்த கூடுதல் கட்டண உயர்வு, பயணிக்கும் தூரத்தை பொறுத்து மாறுபடும்.

உள்நாட்டு வழித்தடங்களில் தூரத்தின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் ரூ.375-ரூ.1,300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது..
- 500 கி.மீ வரை ரூ.375
- 501-1,000 கி.மீ வரை ரூ.600
- 1,001-1,500 கி.மீ வரை ரூ.900
- 1,501-2,000 கி.மீ வரை ரூ.1,150
- 2,001 கி.மீக்கு மேல் ரூ.1,300
என உள்நாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல வெளிநாட்டு பயணங்களுக்கான கூடுதல் கட்டணம் விழத்ததடத்தை பொறுத்து ரூ.1,000 - ரூ.10,000 வரை திருத்தப்பட்டிருக்கிறது.
- சார்க் நாடுகள் (500 கி.மீ வரை) ரூ.1,000
- தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ரூ.5,500
- ஆப்பிரிக்கா ரூ.6,000
- ஐரோப்பிய நாடுகள் ரூ.10,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கட்டண முறையானது அக்.6ம் தேதி இரவு 12.01 முதல் அமலுக்கு வரும். அதாவது நாளை முதல் புக் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். ஆனால், ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த உயர்வு பொருந்தாது.
விமான இயக்க செலவுகளில் எரிபொருள் கட்டணமே பெரும்பகுதியை.. சுமார் 40% அளவுக்கு ஆக்கிரமிப்பதால் இந்த கூடுதல் சுமையை குறைக்க எரிபொருள் கூடுல் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் நீடித்து வரும் போர்ச்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கப்பல் மீதான தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தை மோசமாக பாதித்துள்ளன.
இந்த விநியோக தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய் விலை மிக குறுகிய காலத்தில் 29% வரை அதிகரித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பிரரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100-104 டாலர்கள் என விற்பனையாகிறது. எனவேதான் விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதாக கூறியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
