Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”சிந்துவெளி” நூற்றாண்டு-நிர்மலா சீதாராமனுக்கு 4 ஆண்டுக்கு பின் பதிலடி தந்த தமிழ்நாடு பட்ஜெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டுக் கருத்தரங்கம்" சென்னையில் நடத்தப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழார்வலர்கள், ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

சிந்துசமவெளி நாகரிகமும் வைகை கீழடி தொல்லியல் நாகரிகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.. ஆதித் தமிழரின் பரந்து விரிந்த நிலப்பரப்பின் எச்சங்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து. ஆனால் இதை வட இந்திய ஆய்வாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

Indus Valley Conference: Tamil Nadu Budget 2024 gives reply to Union Minister Nirmala Sitharaman

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், சிந்துசமவெளி நாகரிகம் என்பதை அழுத்தம் திருத்தமாக சரஸ்வதி சிந்து நாகரிகம் என கூறீயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு அப்போது தமிழ்நாட்டு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பில் தீவிரம் காட்டிவரும் மத்திய பாரதிய ஜனதா அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் சூட்டி கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும், தீர்க்கவும் முயல்வதை தமிழகம் பொறுத்துக்கொள்ளாது என எச்சரித்திருந்தார்.

Indus Valley Conference: Tamil Nadu Budget 2024 gives reply to Union Minister Nirmala Sitharaman

மேலும் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார். வேதப் பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குரல் அவையில் எதிரொலிக்கிறது என சாடியிருந்தார்.

தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்டில்) நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி தரும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Indus Valley Conference: Tamil Nadu Budget 2024 gives reply to Union Minister Nirmala Sitharaman

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தொல்லியல் துறை மற்றும் சிந்துவெளி தொடர்பாக கூறப்பட்டிருந்தாவது:

- தமிழகத்தின் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

- சிவங்கை மாவட்டம் கீழடி. விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைகோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள்

- கேரளாவின் முசிறி (பட்டணம்), ஒடிஷாவின் பாலூர், ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் மஸ்கி ஆகிய இடங்களில் அகழாய்வு

- கொற்கை, சங்க கால பாண்டியர் துறைமுகமான அழகன்குளம் 65 லட்சத்தில் முன் கள ஆய்வு

- கீழடியில் ரூ17 கோடியில் அருங்காட்சியம்

- மதுரை காமராஜர் பல்கலையில் தொல்மரபணுவியல் ஆய்வகம்

உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

Indus Valley Conference: Tamil Nadu Budget 2024 gives reply to Union Minister Nirmala Sitharaman

மேலும் "சிந்துவெளிப் பண்பாடு குறித்து முதன் முதலில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அவர்களால் 1924-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டுக் கருத்தரங்கம், பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படும்." என்பது தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்ற அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு சிந்துசமவெளி ஆய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+