டாடா-வை விட பின் தங்கிதான் இருக்கீங்க.. ட்ரோல் செய்தவருக்கு.. ஆனந்த் மகிந்திரா நெத்தியடி பதில்!
சென்னை: பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவிடம் எக்ஸ் தளத்தில், டாடா நிறுவனத்தை விட உங்கள் டிரக் நிறுவனம் பின் தங்கியே உள்ளது என நெட்டிசன் ஒருவர் கூறியிருந்தார். நெட்டிசனின் இந்த கேள்விக்கு ஆனந்த் மகிந்திரா கொடுத்த பதில் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி, ஐடி துறை என பல்வேறு துறைகளில் கோலோச்சும் நிறுவனம் மகிந்திரா. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகிந்திரா. ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தனக்கு பிடித்தமான தகவல்கள், வியப்பூட்டும் படியான துணுக்குகள் என தான் கண்டறிந்த பல விஷயங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகள் எல்லாம் வைரல் ஹிட் அடிக்கும். நெட்டிசன்கள் கேள்விக்கு சுவாரசியமான பதில்களை அளித்து நெட்டிசன்களின் விவாதத்திற்கு தீனி போடவும் தயங்கமாட்டார். அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்று நடைபெற்றது.
நெட்டிசன் எழுப்பிய கேள்வி: ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில், மகிந்திரா நிறுவனத்தின் டிரக் & பஸ் நிறுவனம் 14-வது ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது பெற்று இருப்பதாகவும் அதற்கான படத்தையும் பெருமையுடன் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர்.. உங்கள் நிறுவனத்தின் விற்பனை இன்னமும் டாடாவுக்கு பின்னால்தான் இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.
ஆனந்த் மகிந்திரா பதில்: இதை கவனித்த ஆனந்த் மகிந்திரா.. சுவாரசியமான பதில் ஒன்றை அளித்துளார். அந்த பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஆனந்த் மகிந்திரா... விற்பனை குறைவாக உள்ளதே எனக் கூறிய நெட்டிசனின் பதிவுக்கு கொடுத்த பதிலில், "இந்திய டிரக் இண்டஸ்ட்ரீஸில் டாடா நிறுவனம் வழிகாட்டியாகவும்... தனி பாதையை உருவாக்குவதாகவும் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பை நான் வியப்புடன் ஒப்புக்கொள்கிறேன். டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்த துறையில் போட்டி போடுவதை ஒரு பெருமையாக உணர்கிறோம். நாங்கள் இதை செய்வதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி தரம் மற்றும் திறனை நாங்கள் மேலும் மெருகேற்றுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
நெட்டிசன்கள் கருத்து: நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்தியராக இருப்பதே மிகவும் முக்கியம். டாடா மற்றும் மகிந்திரா ஆகிய நிறுவனங்களுமே இந்திய நிறுவனங்கள்.. எனவே ஆரோக்கியமான போட்டியை கண்டிப்பாக கொண்டாட வேண்டும். இரு நிறுவங்களுமே தங்களால் இயன்ற அளவுக்கு சிறந்ததை கொடுத்து வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, இந்த இரண்டு நிறுவனங்களுமே நம்மை பெருமைபடுத்தக்கூடியவை.
நேற்று கூட ஆஸ்திரேலியாவில் லேண்ட் க்ரூசர் நிறுவனத்தை விட ஸ்கார்பியோ பிக் அப் அதிக மதிப்பு மிக்கதாக உள்ள செய்தியை நான் பார்த்தேன்" என்று கூறியுள்ளார். நெட்டிசன்கள் மத்தியில் ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் வேளையில், அவரிடம் முதன் முதலில் இந்த கேள்வியை கேட்ட நெட்டிசன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. தனது கேள்வியை டெலிட் செய்து விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications