போராட்டங்களே வாழ்க்கை.. 48 ஆண்டு கால அரசியல் பயணம்! திருப்பூர் எம்பி தோழர் சுப்பராயன் யார்?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ வெற்றி பெற்றிருக்கிறது. இதில் திருப்பூர் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.சுப்பராயன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற கட்சிகளை போல கம்யூனிஸ்ட் கட்சிகளில், வேட்பாளர்கள் தேர்வு இருக்காது. மற்ற கட்சிகளில் தலைவர் அல்லது அதிகாரம் மிக்க நபர்தான் வேட்பாளர்களை இறுதி செய்வார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில் தேர்வு குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். சுப்பராயனும் இப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார்.

சுப்பராயன் 1976ம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானர். திருப்பூரில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிற இவர் பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திலும் ஏஐடியூசி அமைப்பின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், மாநில துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டிருக்கிறார். அதே போல் ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் தமிழ்நாடு மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.
அதேபோல 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும் ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். கடந்த 2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், செயல்பட்டவர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இரண்டாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 4,72,739 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
திருப்பூர் என்பது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பிய ஒரு துடிப்பான தொழில் மாவட்டமாகும். இங்கு தமிழர்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் பணி செய்கின்றனர். இருப்பினும் தொழிற்சாலைகளில் இன்னமும் உழைப்பு சுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு எதிராக தொழிலாளர்களை ஒருங்கிணைக்க சரியான தலைமை தேவைப்பட்டது என்றும், அந்த தலைமைதான் சுப்பராயன் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications