சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்.. அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சாஸ்தாவை வழிபடச் செல்வார்கள். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த தகவல் மையங்கள் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வரை செயல்படவுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (அய்யப்பன்) திருக்கோவிலில் மண்டல பூஜை 17.11.2025 முதல் 27.12.2025 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.01.2026 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.01.2026 வரை செயல்படும்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
சபரிமலை தகவல் மையம்:
17.11.2025 முதல் 02.12.2025 வரை: வி. சிவக்குமார்- 94439 94342, ஆர். பிரேம்குமார்- 63858 06900, சி. சந்தீப்குமார்- 85310 70571
03.12.2025 முதல் 17.12.2025 வரை: எம்.சேர்மராஜா- 83440 21828, எல்.லால்கிருஷ்ணன்- 70949 06442, எஸ்.சதீஷ்குமார்- 75588 39969
18.12.2025 முதல் 02.01.2026 வரை: எம்.சுந்தர்- 89219 37043, ஆர்.சிவசங்கர்- 90806 50431, கே.சஜ்ஜீவன்- 99405 76898
03.01.2026 முதல் 20.01.2026 வரை: எச்.வெங்கடேஷ்- 98433 70229, சுதாகர்- 99425 05466, வி.ரமேஷ்- 84384 44770
இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications