ஆஹா.. கன்னியாகுமரிக்கு வருகிறது ஐ.டி. பார்க்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: கன்னியாகுமரியில் ஐ.டி. பூங்கா, கூடுதலாக 100 அரசு சேவைகள் என பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
தகவல் தொழில்நுட்பத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
அதன் விவரம் வருமாறு;

இ சேவை மையங்கள்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது 192 மற்றும் 72 எண்ணிகையிலான அரசின் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த சேவைகளை மேலும் அதிகரிக்கும் பொருட்டு ஏற்கனவே இருக்கும் சேவைகளுடன் கூடுதலாக 100 சேவைகள் இ சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளங்கள் வாயிலாக வழங்கப்படும்.

30000 சதுர அடியில்
திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள ELCOSEZ -ல் அமைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பவியல் கட்டடத்தில் 30000 சதுர அடியில் Start Ups நிறுவனங்களுக்கு ₹6 கோடி மதிப்பில் Plug and Play facility ( ஆயத்த அலுவலக இடவசதி ) நிறுவப்படும். இதற்கான செலவினத்தை ELCOT நிறுவனம் ஏற்கும்.

தனித்துவ வளாகம்
சென்னை கோட்டூர்புரத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் (Integrated IT Signature Complex) 2.6 லட்சம் சதுர அடியில் ₹150 கோடி செலவில் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பவியல் துறை இனி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என்று மறு பெயரிடப்படும்.

தமிழ் இணையக் கல்வி
தமிழ் இணையக் கல்வி கழகத்தில் கணினி தமிழ் தொடர்பான கருவிகள் மற்றும் மென்பொருட்களை உருவாக்குவதற்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து முன் மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, இவை ஆய்வு செய்யப்பட்டு பயனுள்ள திட்டங்கள் ₹2 கோடி செலவினத்தில் தமிழ் இணையக் கல்வி கழகத்தால் செயல்படுத்தப்படும்.

மின் நூலகம்
தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு தேவைப்படும் கணினிகள், மடி கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் ₹1 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும் தமிழ் இணையகல்வி கழகத்தின் மின்நூலகத்தில் ( www.tamildigitallibrary.in ) 50000 அரிய வகை நூல்கள் மற்றும் ஓலை சுவடிகள் கொண்ட மின்நூலகத்தை இதுவரை 21165112 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த மின்நூலகம் ₹1கோடி செலவில் 1 லட்சம் மின்நூல்களை கொண்ட பல்லூடக Digital Library - யாக நவீனப்படுத்தப்படும்.

குமரியில் ஐடி பார்க்
கன்னியாகுமரியில் 50000 சதுர அடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ₹50 கோடி செலவில் அமைக்கப்படும்.முதலமைச்சரின் 1 Trillion Economy- யில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை 100 பில்லியன் பொருளாதார பங்கீட்டை கொடுக்கும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் அறிவிப்பு.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications