நாடு முழுக்க உள்ள.. இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு முக்கிய மெயில்.. ஐடி துறையில் இதுவரை நடக்காத சம்பவம்
சென்னை: வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கிடையே சரியான சமநிலையை உறுதி செய்யும் நோக்கில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 9.15 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை நேரம் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படும்.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது" என்று மின்னஞ்சல்கள் மூலம் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்களின் பணி நேரத்தில் கடுமையாக கவனம் செலுத்துகிறது. ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எச்சரிக்கை மெயில்களை அனுப்பும் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இத்தகைய நடவடிக்கை, நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்துக்கு முரணாக இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவன ஊழியர்களின் வேலை நேரம்
சமீபத்தில், கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழாவில் பேசிய நாராயண மூர்த்தி, இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் மிக சரியான காலத்தில் உள்ளோம். இது போன்ற சாதகமான சூழ்நிலை அமைவது கடினம். இந்த இளைஞர்கள் பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்ஃபோசிஸ் உருவாக்கிய போது அதை உலக தரத்திற்கு கொண்டு செல்வோம். உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டி போட வைப்போம் என்று கூறினேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுவேன் என்று சொன்னேன். அதற்காக உழைத்தேன்.
சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நான் சும்மா இல்லை.. அதற்காக உழைத்தேன்.. 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவதோடு இருக்க கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். 10 மணி நேரத்திற்கும் மேல் இருக்க கூடாது. இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் உள்ளனர். நாம் கடினமாக உழைக்கும் நிலையில் நாம் முன்னேற முடியும். நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும், என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். அது சரியாக இருக்காது. நாம் வேலை நேரத்தை 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும். தந்தை அந்த நேரத்தில் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த அசாதாரண முன்னேற்றத்தைப் பற்றி பேசுவார், 70 களின் முற்பகுதியில் பாரிஸில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, நான் குழப்பமடைந்தேன். இந்தியா எவ்வளவு அசுத்தமானது, ஊழல் நிறைந்தது என்று மேற்குலகம் பேசிக்கொண்டிருந்தது. என் நாட்டில் வறுமை இருந்தது, சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது ஆனால் நான் கடுமையாக உழைத்தேன். இன்போசிஸ் நிறுவனத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிக கடுமையான பணிகளை செய்தேன். நாம் இப்போதும் அதே சூழலில்தான் இருக்கிறோம்.
மேற்கு உலக நாடுகளை விட புதிய உயரத்திற்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இனி வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். நம்முடைய இந்திய கலாச்சாரம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை மறக்க கூடாது. இந்த கலாச்சாரம் மீண்டும் சர்வதேச அளவில் உச்சம் அடைய வேண்டும். சர்வதேச அளவில் பெரிய நாடாக மாற வேண்டும். வறுமையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். அதற்கு நாம் தினமும் உழைக்க வேண்டும். வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10- 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும். கணக்கு பார்க்காமல் உழைக்க வேண்டும், என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்போசிஸ், பணியாளர்களின் வேலை நேரத்தைக் கண்காணிக்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. இது, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது, தொலைதூரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications