மசோதாக்களை பரிசீலிப்பதை விட ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன வேலை இருக்கு? -இனிகோ இருதயராஜ்
சென்னை: தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களை பரிசீலிப்பதை விட ஆளுநருக்கு அப்படி என்ன தான் வேலை உள்ளதோ தெரியவில்லை என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் சாடியுள்ளார்.
ஆளுநரிடம் இருந்து அதிகார ஆக்கிரமிப்பை மீட்டே தீருவோம் என்றும் கூறியிருக்கிறார். ஆளுநர் மீது குற்றஞ்சாட்டி இனிகோ கூறியதாவது; ''தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தராமல் இருப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆளுநர் ரவி ஒரு விபரீத அரசியல் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தது.''

''அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு மறுபரிசீலனைக்காக அனுப்ப வேண்டும் என்று சொல்லி உள்ளது நீதிமன்றம். ஆனால் இதில் எதையுமே செய்யாமல் சட்டப்பேரவையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல், இப்போது உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தவுடன் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ''
"ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தால் அது செத்துவிட்டது என்று அர்த்தம்" என்று சொன்ன ஆளுநர் ரவிக்கு இப்போது உச்சநீதிமன்றம் குட்டு வைத்தவுடன் பதற்றம் அதிகரித்திருக்கிறது போலும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சில அதிகாரங்களைத் தவிர மாநில அரசின் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று இப்போது உச்ச நீதிமன்றம் கூறியவுடன் பதற்றம் தாளாமல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.''

''அரசியல் சட்டத்தின் மாண்பை மதிக்க வேண்டும் ஆளுநர் ரவி. மசோதாக்களை பரிசீலிப்பதைவிட அவருக்கு அப்படி என்ன வேலை என்று தான் தெரியவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகச் செயல்படும் ரவி அவர்களின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.''
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications