தாம்பரத்தில் தலை இல்லாமல் உலா வரும் நபர்.. மிரண்டு போன போலீசார்.. கடைசியில் விஷயம் இதுதானாம்!
சென்னை நபரின் வித்தியாசமான கொரோனா விழிப்புணர்வு வீடியோ வைரலாகிறது
சென்னை: சென்னை தாம்பரத்தில் ஒருத்தர் தலையே இல்லாமல் மர்மமான முறையில் வலம் வருவதை போலீஸார் உட்பட பொதுமக்களே மிரண்டு போய்விட்டனர்.
சென்னை தாம்பரம் பஸ் அருகே டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது ஒருவர் பைக்கில் அந்த பக்கமாக வந்தார்.
கருப்பு கலர் கோட் - சூட் அணிந்திருந்தார்.. கூலிங் கிளாஸ், தொப்பியுடன் காணப்பட்டார் அவர்.. ஆனால், அவருக்கு தலையை மட்டும் காணோம்.. அந்த தொப்பியும், கூலிங்கிளாசும் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

மர்ம நபர்
இதை பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.. ஆனால், அந்த மர்ம மனிதனே, டிராபிக் போலீசாரை பார்த்ததுமே பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வந்தார்.. அருகில் அவர் வர, வர போலீசார் மிரண்டு விழித்தனர்.. பின்னர் திடீரென ஒரு ரோசாப்பூவை போலீசாருக்கு எடுத்து நீட்டினார்.. அதை போலீசார் வாங்கி கொண்டு, அந்த நபரையே கலக்கத்துடன் பார்த்தனர்.

கொரோனா
அதன்பிறகு, ஒரு நோட்டீஸை போலீசாரிடம் நீட்டினார்.. அதை வாங்கி பார்த்தபோது, "கொடிய வைரஸ் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டிருக்கும் மருத்தவர்கள், செவிலியர்கள், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள், பத்திரிகை துறையினர், ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி" என்று அச்சிடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும்தான் போலீசாருக்கு நிம்மதியாக இருந்தது.

நோட்டீஸ்
அந்த நபர் ஒரு மேடை கலைஞராம்.. பெயர் மதன்குமார் .. கொரோனா விழிப்புணர்வுக்காக இப்படி ஒரு கெட்டப்பில் சென்னையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.. நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களுக்கெல்லாம் பைக்கில் இதே கெட்டப்பில் சென்று நன்றி சொல்லி வருகிறார். போலீசாருடன் தலையே இல்லாமல் ஒரு நபர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும் ஷாக் ஆனார்கள்.

வைரல் வீடியோ
பிறகு அவரது பைக்கில் முன்பக்கம், இதே நோட்டீஸை ஒட்டி வைத்திருந்தார்.. அதன்பிறகுதான் அவர்களும் நிம்மதி அடைந்தனர்.. அவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்து கொண்டனர். மறுபடியும் பைக் எடுத்து கொண்டு, கிளம்பும்போது, "ஹெல்மெட் போட்டவர்களே பலர் விபத்துக்களில் சிக்கி கொள்கிறார்கள்.. பார்த்து போங்க" என்று அவருக்கு அட்வைஸ் தந்தனர்.. இந்த மர்ம நபரின் வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோதான இணையத்தை கலக்கி வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications