தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்.. எதிரிகளுக்கு உதவும் துரோகிகள்.. மாணிக்கம் தாக்கூர் ஆவேசம்
சென்னை: சிலர் விளம்பரத்திற்காக காங்கிரஸ் இயக்கத்திற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்துகிறார்கள், எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள் என்று, மாணிக்கம் தாக்கூர் எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் தலைவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ஜோதிமணி ஒரு பக்கம் டுவிட்டரில், பணம் உள்ளவர்களுக்கு காங்கிரசில் சீட் தரப்படுவதாக குற்றம்சாட்டி சீறியுள்ளார்.
காரைக்குடியில், காங்கிரஸ் தொண்டர்கள் ஒத்துழைக்கவில்லை என்று, ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரசுக்குள் கருத்து மோதல்
இப்படி பல்வேறு தலைவர்களும் பல கருத்துக்களை கூறி வருவதால், காங்கரிஸ் முகாமில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை வாங்கிவிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் கோஷ்டி பூசலால் ஸ்தம்பித்து நிற்கிறது காங்கிரஸ்.
|
3 வகை போராட்டங்கள்
காங்கிரஸ் அலுவலகத்தில், விஷ்ணுபிரசாத் போராட்டம், அழகிரிக்கு ஆதரவாக போராட்டம், விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது என்று ஒரு போராட்டம் என 3 வகை போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில்தான், விருதுநகர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பி, மாணிக்கம் தாக்கூர் சில ட்வீட் வெளியிட்டுள்ளார். அதை பாருங்கள்.

விளம்பரத்திற்காக இழிவு
அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாககிடைக்கும் ஆன சிலர் விளம்பரத்திற்காக காங்கிரஸ் இயக்கத்திற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்.

நியாயம் பேசுகிறார்கள்
கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டதலைவருக்கு அதுவும் சில நூறு ஓட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்ககூடாது என சண்டை போட்டு வரவிடாமல் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?

பாஜகவுக்கு உதவ குழப்பம்
தன் தந்தையால் MLA இப்ப MP வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக+அதிமுகவுக்கு உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை. ஆனால், இன்று நாடகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications