துணிச்சலான இன்ஸ்பெக்டரா? திடீரென கேட்ட பிரதமர்... ஆச்சர்யப்பட்ட டிஜிபி
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய அளவிலான டிஜிபி/ஐஜிக்கள் மாநாடு நடந்தது. 2 நாள் மாநாட்டில் பிரதமர் கலந்துக்கொண்டார். தமிழகத்திலிருந்து கலந்துக்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபுவிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி எப்படி இருக்காங்கன்னு பிரதமர் கேட்க பிரதமர் அளவுக்கு அவர் விவகாரம் சென்றுள்ளதையும் ஃபிங்கர் டிப்ஸில் வைத்துள்ளதையும் கண்டு டிஜிபி ஆச்சர்யப்பட்டுள்ளார். மாநாட்டிலும் பிரதமர் பேசியுள்ளார்.
இளைஞரை மீட்டு இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமான இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியை தமிழகமே கொண்டாடியது. மழை வெள்ளத்தில் இரவு முழுவதும் கல்லறையில் மழைநீரில் கிடந்த ஓர் இளைஞரை அவசரமாக மீட்டு, தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனையில் அனுமதித்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.

சமூக வலைதளத்தில் குவிந்த பாராட்டு
பதற்றத்துடன் இளைஞரை தோளில் தூக்கி வைத்து ஓடுவதும் விரைவாக வண்டியில் ஏற்றி அனுப்பிய இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்கள் பாராட்டை குவித்தது. ஊடகங்கள் பாராட்டி எழுதின. சிறிது நேரத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா என ராஜேஷ்வரி பேசுபொருளானார். இந்திய அளவில் ப்ருட், வயர் போன்ற மிகப்பெரிய வலைதளங்கள் அவரது செயலை பாராட்டின.

உடனடியாக பாராட்டிய முதல்வர்
ராஜேஷ்வரியின் செயலை டிஜிபி பாராட்டினார் மறுநாள் காலை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டினார், ஆளுநர் ரவி தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் பாராட்டினர். சமூக வலைதளங்கள் அல்லாமல் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் பாராட்டினர்.

இந்திய அளவிலான டிஜிபிக்கள் மாநாடு-பிரதமர் பங்கேற்பு
உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை சார்ந்த டிஜிபி/ஐஜிக்கள் மாநாடு உ.பி. மாநிலம் லக்னோவில் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா முழுவதுமிருந்து டிஜிபிக்கள் மற்றும் ஏடிஜிபி அல்லது ஐக்ஜி அந்தஸ்து அதிகாரி ஒருவர் கலந்துக்கொண்டார்கள். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு, சைபர் பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ்புஜாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ராஜேஷ்வரி எப்படி இருக்கிறார் கேள்வி கேட்ட பிரதமர் ஆடிப்போன டிஜிபி
விழாவில் சிறப்பு விருந்தினராக 2 நாட்களும் பிரதமர் கலந்துக்கொண்டார். விழாவில் பேசும் முன் டிஜிபியிடம் பேசிய பிரதமர் உங்கள் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு டிஜிபி சைலேந்திரபாபு வியந்து போயுள்ளார். எங்கோ டி.பி.சத்திரத்தில் நடந்த விஷயம் பிரதமர் பார்வைக்கு போய் விசாரிக்கிறாரே என வியந்துபோயுள்ளார்.

விழாவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர்
டிஜிபியிடம் கேட்டதல்லாமல் விழாவில் பேசிய பிரதமர் இந்திய அளவில் போலீஸார் செயல்பாடுகள், தியாகம், அவர்கள் ஆற்றிய வீரஞ்செரிந்த பணிகள், மக்கள் பணி போலீஸ் முன்னுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றை பேசியுள்ளார். அப்போதும் தமிழகத்தில் சென்னை டிபிசத்திரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி ஒரு இளைஞரை காப்பாற்றும் எண்ணத்தில் தோளில் தூக்கிப்போட்டு துரிதமாக செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டு வாழ்த்தி பேசியுள்ளார்.
Recommended Video

அவ்வளவு எளிதில் கிடைக்காத பாராட்டு
மிகப்பெரிய ஐபிஎஸ் அதிகாரிகள், செயற்கரிய செயல் புரிந்தவர்கள் செயல் கூட அவ்வளவு எளிதில் செல்லாத காலம் இருந்தது, ஆனால் சமூக வலைதளங்களின் வளர்ச்சி, ஐபி ரிப்போர்ட் பிரதமர் அலுவலகத்தின் வேகமான செயல்திறன் கீழ்பாக்கத்தில் சிறிய அளவில் நடந்த சம்பவம் பிரதமர் குறிப்பிட்டு பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு மத்திய அரசின் பதக்கம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications