ஒரே வீடியோ ஓஹோன்னு வாழ்க்கை.. படுக்கையறை காட்சிகளை பகிரும் குடும்ப பெண்கள்.. எங்கே போகுது இன்ஸ்டா
சென்னை: சூர்யவம்சம் படத்தில் வருவது போல், ஒரே பாட்டில் முன்னேற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்.. ஒரே வீடியோ,ஓஹோன்னு வாழ்க்கை என்று டிரெண்டிங் ஆக நினைக்கிறார்கள். டிரெண்டிங் இன்ஸ்டா பிரபலம் ஆக மாறினால், நிறைய விளம்பரம் தேடி வரும்.. அதன் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் வியூஸ்க்காக எல்லை மீறி போகிறார்கள். கணவன் மனைவி, எதையெல்லாம் வெளி உலகில் காட்டக்கூடாதே அதைக்கூட வியூஸ்க்காக வெளியிடுவது அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் பொழுதுபோக்காக மட்டுமே இருந்த பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இன்றைக்கு பொழுதுபோக்கு தலமாக மட்டும் கிடையாது. பலரையும் சமூகவலைதளங்களுக்கு அடிமையாக்கும் அளவிற்கு விஷயங்கள் உள்ள இடமாக மாறிவருகிறது.

இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்கள்
சமூக வலைதளங்களில் இன்புளுயன்சர்களாக உள்ளவர்களின் லைப் ஸ்டைலை பார்த்து பலரும் யூடியூப்பில் , இன்ஸ்டாவில், பேஸ்புக்கில் வீடியோ போடுவது அதிகரித்துள்ளது. பேஸ்புக், யூடியூப்பில் கூட ஓரளவு கட்டுப்பாடுகள் உள்ளன.கண்டபடி வீடியோக்கள் போட முடியாது. ஆனால் இன்ஸ்டாவிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை..
குடும்ப விஷயங்கள்
அதில் விளம்பரங்கள் மூலம் லட்சங்களை சம்பாதிக்க ஆசைப்படும் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் கண்டதையும் வீடியோவாக போடுகிறார்கள்.தினமும் காலை எழுந்தது காபி குடிப்பது போல், பக்கத்து வீட்டு விஷேசத்திற்கு போவது, கணவன் மனைவி சண்டை, கணவன் மனைவி இடையே கேலி கிண்டல் செய்து பேசுவது வரை, மகன் , மகளுக்கு சாப்பாடு கொடுத்துவிடுவது, மாமியார் சொன்ன கதை, மாமானார் சொன்ன கதை, பக்கத்து வீட்டு பார்வதியின் வளைகாப்பு வரை எல்லாமே கண்டென்ட் தான் அவர்களுக்கு..
எல்லை மீறல்கள்
கறி எடுத்து குழம்பு வைத்து தொடங்கி, கடைசியில் படுக்கைக்கு செல்வது வரை எல்லாவற்றையும் கண்டென்ட் ஆக பார்க்கிறார்கள். வியூஸ்க்காக எல்லை மீறி அன்றாட வாழ்க்கையை பகிருகிறார்கள்.. யார் என்றே தெரியாத,முகமே தெரியாதவர்களுக்கு தங்கள் வீடுகளில் நடப்பதை வீடியோவாக போடுகிறார்கள். இதுவே மோசம் என்கிற நிலை அளவில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வருகிறது.
புதிய டிரெண்ட்
இந்த சூழலில் புதிதாக ஒரு டிரெண்ட் வேகமாக தம்பதியரிடம் பரவி வருகிறது.வியூஸ்க்காவும், சீக்கிரம் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும், படுக்கை அறை காட்சிகளை கூட காட்டுகிறார்கள். சில அரை குறை ஆடைகளுடன் வீடியோ போடுகிறார்கள். அவர்கள் வீட்டில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. அதில் தவறுகள் இல்லை..
வேலூரில் 10 ஆயிரம் கடனுக்கு வாரம் ஆயிரம் வட்டி.. கார்பெண்டர் வெளியிட்ட கடைசி வீடியோ
குடும்ப பெண்கள்
ஆனால் கணவன் மனைவி இடையே உள்ள ரகசியங்களை கூட பகிரும் அளவிற்கு ரீல்ஸ் மோகமும், வியூஸ் மோகமும் அதிகரித்து வருகிறது. இவர்கள் பிரபலம் ஆவதை பார்த்து சில குடும்ப பெண்களும் இப்படி ரீல்ஸ் போட்டால் என்ன என்று தாங்களும் மாற நினைத்துவிட்டது தான் மிகவும் கவலை தரும் விஷயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.. எல்லை மீறி இன்ஸ்டாவில் குடும்பம் நடத்தும் ஜோடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பல நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications