வேலூரில் 10 ஆயிரம் கடனுக்கு வாரம் ஆயிரம் வட்டி.. கார்பெண்டர் வெளியிட்ட கடைசி வீடியோ
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காசிமாலா பகுதியைச் சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். வெறும் 10 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த கடன், அவரது கழுத்து வரை நீண்டுள்ளது. வாரம் ஆயிரம் ரூபாய் வட்டிகட்டியிருக்கிறார் . ஒரு கட்டத்தில் கடனை கட்ட முடியாத நிலையில் எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சரகுப்பம் காசிமாலா பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவருடைய மகன் நஸ்ருல்லாவுக்கு 36 வயது ஆகிறது. இவர் தச்சுத்தொழிலாளி ஆவார். இவர் தனது மனைவி ஆசிபா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். நன்றாக சென்ற இருவருடைய வாழ்க்கையில் கடன் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நஸ்ருல்லா, குடும்பத் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நஸ்ருல்லா மன உளைச்சலில் இருந்திருக்கிறாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் ஏரியில் உள்ள புளிய மரத்தில் நஸ்ருல்லா வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீசார் விரைந்து வந்து நஸ்ருல்லாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நஸ்ருல்லா வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன், வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "கந்து வட்டிக்கு 2 பேரிடம் ரூ.10 ஆயிரம் வாங்கினேன்.. வாரத்துக்கு ஆயிரம் ரூபாய் வட்டியாக கட்டி வந்தேன். சம்பாதித்த பணம் எல்லாம் வட்டிக்கே சென்று விட்டேன்.. குடும்பத் தேவைக்காகப் பலரிடம் கடன் வாங்கும் சூழ்நிலைக்குச் சென்று விட்டதால் இந்த முடிவினை தேடிக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
நஸ்ருல்லாவின் உறவினர்கள், கிராம மக்கள், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், நஸ்ருல்லாவின் முடிவுக்கு காரணமான கந்து வட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் ஆகியோர் நஸ்ருல்லாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நஸ்ருல்லா வீடியோ வெளியிட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட கந்துவட்டி நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத் ஏற்றுக்கொண்ட அவரின் உறவினர்களும், கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். அதைத்தொடர்ந்து நஸ்ருல்லா உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications