"அடிபொலி.." ஆட்டம்னா இதுதான் ஆட்டம்.. ஓமன சேச்சியும், ஓணம் டான்சும்.. யாரு பெஸ்டு!
சென்னை: என்னதான், கேரள நாட்டிளம் பெண்கள் வெள்ளை நிறப் புடவையில் சற்றே தங்க நிறத்திலான ஜரிகை போட்ட சேலை கட்டியிருந்தாலும், ஓணம் பண்டிகை என்பது என்னவோ வண்ணமயமான திருவிழாதான்.
நம்ம ஊருக்கு பொங்கல் எப்படியோ, அப்படித்தான் கேரளாவில் ஓணம். அறுவடை திருநாள்.
ஓணம் சத்யா என்று கூறி சாப்பாடு அளிப்பதோடு முடிந்துவிடுவதில்லை இந்த பண்டிகை. பிரமாண்டமாக பூக்களில் கோலமிட்டு வீடுகளில் தோரணமிட்டு தெரு முழுக்க அலங்காரம் செய்து ஆரவாரிக்கின்றனர் மலையாளிகள்.
|
அந்த சேலை
மலையாளிகள் எப்படி எப்படியோ கொண்டாடினாலும் நம்ம ஊர் இளசுகள் கண்கள் முழுக்க அந்த ஓணம் ஸ்பெஷல் சேலை மீதுதான். சேலையால் பெண்களுக்கு அழகா, அந்தப் பெண்களால் இந்த சேலைக்கு அழகா என்று கோபிநாத் இல்லாமல் நீயா நானா நடத்தி வருகின்றனர் நம்மாட்கள். அதேநேரம், இளைஞிகள் மட்டுமல்ல, க்யூட் குழந்தைகளும் ஓணத்திற்காக ஸ்பெஷல் டான்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். அப்படியான ஒரு வீடியோதான், இங்கே நீங்கள் பார்ப்பது.
|
ஓணம் நடனம்
இளம் பெண்கள் சேலையை உடுத்தி நடந்து சென்றாலே ஏக வரவேற்பு என்றால், கூட்டமாக சேர்ந்து கும்மாளம் போட்டு நடனமாடி தங்கள் ஆரவாரத்தை இளம்பெண்கள் வீடியோ பதிவாக வெளியிட்டால் என்னவாகும். எந்த நடனம் சிறப்பு, நெருப்பு என்பதை தேர்வு செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போயிருக்கின்றனர் ரசிகாஸ். பல பெண்களுக்கு நடுவே, இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும், இளைஞர் போடும் குத்தாட்டம், காண்போரை மெய்மறக்க வைக்கிறது.
|
கலர் கலரா சோப்பு சீப்பு கண்ணாடி
கலர் கலராக கண்ணாடி போட்டுக் கொண்டு ஆடும் பெண்கள், எளிய நளினத்தை நடனத்தோடு கலந்து நாட்டிய திருவிழா நடத்தும் பெண்களையா, எதை சொல்வது, எதை விடுவது என்று தெரியாமல் கண்ணில்படும் வீடியோக்கள் அனைத்தையும் காட்டாற்று வெள்ளம் போல ஷேர் செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.
|
ஜட்ஜ்மென்ட் கொடுங்க
இதோ அப்படியான சில வீடியோக்களை நீங்களும் பார்ப்பதற்காக ஷேர் செய்து இருக்கிறோம். பார்த்துவிட்டு எந்த நடன கோஷ்டி சிறப்பான நடனமாடியது என்பதை தீர்ப்பளிக்கும் கலா மாஸ்டர்களாக நீங்கள் மாறினால் மகிழ்ச்சியே. அதே நேரம் நம்ம ஊரில் ஏன் இப்படி ஆட மாட்டார்களோ என்ற கேள்வியை இதை பகிர்வு செய்த நெட்டிசன்கள் எழுப்புவதையும் பார்க்க முடிகிறது. இது கொஞ்சம் பழைய வீடியோ என்றாலும், இந்த சிட்டுவேஷனுக்கு பொருந்தக் கூடியதுதான்.

பெஸ்ட் டான்ஸ்
வீட்டுக்கு வெளியில் நின்று பேசினாலே அரிவாளைத் தூக்கி வெட்ட துரத்துவோர் இருக்கும் ஊரில் இதெல்லாம் சாத்தியமா.. அங்கு இருக்கும் பெண்களின் தைரியம் அசாத்தியமானது என்று அதற்கு நம்மவர்களே பதிலும் சொல்கிறார்கள். வாருங்கள் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு எது சிறந்த நடனம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.












Click it and Unblock the Notifications