மோடி தன்னிச்சையாக முடிவெடுத்தால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி.. ராகுல் காந்தி எச்சரிக்கை
சென்னை: அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் செயல்படாமல் போனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோற்றுபோகும் வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இருந்தபடி இன்று வீடியோ மூலமாக செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதன், தொகுப்பு இதோ:
பிரதமர் நரேந்திர மோடியின் பணியாற்றும் பாணி என்பது பிற நேரங்களில் வேண்டுமானால் பலன் அளிக்கலாம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கான ஒரு பிரச்சனையை இந்த நாடு எதிர் கொண்டு இருக்கக் கூடிய நிலையில், மோடியின் வழக்கமான பாணியில் எந்த பலனும் இருக்காது.

வலிமையான முதல்வர்கள், கலெக்டர்கள்
ஒரு வலிமையான பிரதமர் மட்டும் இப்போதைக்கு தேவை கிடையாது. நமக்கு தேவை, நிறைய.. நிறைய, வலிமையான தலைவர்கள். வலிமையான முதல்வர்கள், வலிமையான கலெக்டர்கள் தேவை. பஞ்சாயத்து அளவில், மாவட்ட அளவில், மாநில அளவிலான தேசபக்தி கொண்ட தலைவர்கள்தான் இப்போதைக்கு உடனடி தேவை. இந்த போராட்டத்தை உள்ளூர் அளவில் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இது தேசிய அளவில் இருந்து கொண்டு தீர்க்கக் கூடிய விஷயம் கிடையாது.

மண்டல அறிவிப்புகள்
உதாரணத்திற்கு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் பற்றி தேசிய அளவில் அறிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் அளவில் எடுக்கக் கூடிய ஒரு முடிவு இதுவாகும். உள்ளூர் நிலவரத்தை அறிந்து வைத்திருப்பது அவர்கள்தான்.

பாஸ் மாதிரி இன்றி சக ஊழியர் போல ஆலோசியுங்கள்
முதல்வர்களுடன் பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசிக்க வேண்டும். ஒரு பாஸ் மாதிரி கிடையாது. சக ஊழியரை போல இந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பது பற்றி வெளிப்படையான கொள்கை இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்யாமல் நாட்கள் லாக்டவுனை நீடிக்க முடியாது.

மக்களுக்கு பயம்
ஊரடங்கு உத்தரவை என்பது மக்களுக்கு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். ஆன் செய்வது, ஆப் செய்வது என்பதற்கு இது ஸ்விட்ச் கிடையாது. நோய் பற்றி மக்கள் இப்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே மக்களுக்கு, மன உளைச்சல் ஏற்படுகிறது. விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஆனால் மக்கள் மனதில் இருக்கக்கூடிய பயத்தை முதலில் அகற்ற வேண்டும்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications