"உளவுத்துறையா".. ரகசியங்களை கசிய விட்டது யார்.. வேட்டையாடப்படும் ஆதிதிராவிட இளைஞர்கள்.. விசிக ஆவேசம்
கைதாகி உள்ள ஆதிதிராவிட இளைஞர்களை விடுவிக்க விசிக கோரிக்கை விடுத்துள்ளது
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராடியதாக கூறி ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நுழைந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என விசிக வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுவரை இவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜீப், வேன்
அந்த போராட்டம் அமைதியான முறையில் அறவழியில், நடந்து வந்த நிலையில், திடீரென கடந்த 17ம் தேதி அதே போராட்டத்தில் வன்முறை வெடித்தது... ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி மத அடையாளம் கடந்து பள்ளி வளாகத்தில் திரண்டு அந்த பள்ளியை தாக்கியதுடன், அங்கிருந்த ஜீப், வேன், டூவீலர்களை தீயிட்டு கொளுத்தினர்.. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்தது.. அதில் 50க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர்.

டிஜிபி வார்னிங்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபியும் எச்சரித்திருந்தார்... அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், ஆங்கில நாளேடு ஒன்று உளவுத்துறை தகவலை மையமாக வைத்து ஷாக் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டப் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் இருப்பதாக அந்த செய்தி வெளியாகி உள்ளது.

உளவுத்துறை
உளவுத்துறையின் மூலம் இந்த தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.. மற்றொருபுறம், சம்பந்தப்பட்ட பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பல ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்... இந்த சம்பவத்துக்குதான் விசிக கொந்தளித்துள்ளது.. திருமாளவன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து திருமா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரகசிய தகவல்
சாதி மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது, இது உளவுத்துறையின் சதி, உளவுத்துறையில் உள்ள சாதியவாதிகளின் சதி, மாணவியின் நீதிக்கான போராட்டத்தை சாதி போராட்டமாக திசை திருப்ப முயற்சி நடக்கிறது.. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அரசுக்கு அளித்த ரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும்.

விசிக வன்னியரசு
பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது என்று காட்டமாக கூறியிருந்தார். அதேபோல விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசும், இது தொடர்பாக ட்வீட் பதிவிட்டுள்ளார். மாணவிக்காக நடந்த மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் துடிக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் என்று வன்னியரசு பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்..

ஆதிதிராவிட இளைஞர்கள்
மேலும் அவர் கூறியதாவது, "ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது.. 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்கிறது, பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் மூலமாக ஆதிதிராவிட குடியிருப்புக்குள் புகுந்து படித்த மாணவர்களை அடையாளம் காட்டி வருவதாக தம்பிகள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர்.

தேடுதல் வேட்டை
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராடுவது தவறா? கைது செய்யப்பட்ட ஆதிதிராவிடர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை உடனே நிறுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் திசைமாறி, எங்கெங்கோ பயணித்து கொண்டிருந்தாலும், அந்த மாணவி நிஜமாகவே எப்படி இறந்தார் என்பது தெரியாததுதான் நம் மீளமுடியாத அதிர்ச்சியாக உள்ளது
-
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications