ஸ்டாலினிடம் உளவுத்துறை எச்சரித்துமா? கைவிட்டாரா சேகர் பாபு? கொளத்தூரில் குப்புற விழ காரணமே இதுதான்
சென்னை: கொளத்தூர் தொகுதியானது கடந்த 15 வருஷமாக திமுக தலைவர் ஸ்டாலினின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது.. ஆனால் இன்று ஆடிப்போய்க் கிடக்குது. ஒரு முதலமைச்சர், அதுவும் போன தேர்தல்ல ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றவர் தோல்வியை சந்தித்துள்ளார்.. இது சாதாரண தோல்வி என்று எடுத்து கொள்ள முடியாது.. கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைய என்ன காரணம்?
முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்காக இந்த 5 வருடத்தில் மட்டும் 54,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறாராம்.

கொளத்தூர் - ஸ்டாலின் தொகுதி
முக்கியமாக, கொளத்தூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு வசதியைக் கொண்டு வந்து அமல்படுத்தியது மிகப்பெரிய விஷயமாகும்.. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா கேட்டு கொளத்தூரில் 4,000 குடும்பங்கள் காத்து கிடக்கிறதாம்.. அந்த குமுறலை அரசு துடைக்கவில்லை என்கிறார்கள்.
"மெட்ரோ ரயில் வந்தால் மட்டும் போதுமா? எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டா இல்லையே" என ஒரு முதியவர் கேட்கும் கேள்வியில் இருக்கும் நியாயம், கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களுக்கு முன்னால் வலுவாக நின்றது.
மெட்ரோ ஓகே, பட்டா எங்கே
50,000 கோடிக்கும் மேலாகச் செலவு செய்திருந்தாலும், சாலை வசதி, போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள் போன்ற மக்களின் தினசரி அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் திமுக கோட்டை விட்டுவிட்டது. மக்கள் அவரை ஒரு முதலமைச்சராக பார்த்தார்களே தவிர, தங்களின் குறைகளைத் தீர்க்கும் தொகுதி எம்.எல்.ஏவாகப் பார்க்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யின் தவெக) இங்கே ஒரு பெரிய மாற்றத்தைத் தொடங்கியிருக்கிறது. "யார் நின்றாலும் பரவாயில்லை, ஒரு மாற்றம் வேண்டும்" என்று நினைத்த மக்களின் மனநிலை அப்படியே வாக்குகளாக மாறியிருக்கிறது. விஜய் மேடையில் பேசிய அந்த மிக எளிமையான மொழி, மக்களைத் நேரடியாகச் சென்றடைந்தது.
பற்றிய விஜய் அலை
சினிமாவில் இருக்கும் அந்த ஹீரோ பிம்பம் அப்படியே அரசியலுக்கு மாறி, திமுகவின் திராவிட அரசியலுக்குச் சவால் விடுத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மொத்தமாகத் தவெக பக்கம் சாய்ந்தது திமுகவிற்கு ஒரு பேரிடி. விஜய்யின் பலத்தை மிகச் சாதாரணமாகக் குறைத்து மதிப்பிட்டதுதான் திமுக செய்த மிகப்பெரிய தவறு.
"கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டாம்... வேறு தொகுதிக்கு மாறுங்கள்" என உளவுத்துறை முன்பே ஸ்டாலினிடம் அலர்ட் செய்ததாம். ஆனால், "நாம் இவ்வளவு செய்திருக்கிறோம், மக்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள்" என்று அமைச்சர் சேகர்பாபு சொன்னாராம்..
உளவுத்துறை சொன்னதா
ஆனால், சேகர்பாபு போன்ற உள்ளூர் நிர்வாகிகள் கொடுத்த உறுதிமொழிகள் வெறும் பேச்சோடு நின்றுவிட்டதாம். களத்தில் தேர்தல் பணிமனைகள் பரபரப்பின்றி காணப்பட்டபோதே திமுகவின் வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது ஒரு தொகுதியின் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆட்சி முறையின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியின் வெளிப்பாடு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கவுன்சிலர்கள் மீதிருந்த கோபமும், மக்களின் நிஜப் பிரச்சனைகளைக் கவனிக்கத் தவறியதும்தான் ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியிலேயே பின்னடையச் செய்து விட்டது என்கிறார்கள்.. இதற்கு எதிராகச் சொல்லக் கூடிய நிலை இப்போதைக்கு இல்லை.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், 'நாம்தான் ராஜா' என்று நினைத்துக்கொண்டிருந்த திராவிட அரசியலின் ஒரு நீண்ட அத்தியாயம் கொளத்தூரில் முடிவுக்கு வந்துவிட்டது. இது வெறும் சரிவு அல்ல. மாற்றத்தை விரும்பிய மக்கள் வழங்கிய தீர்ப்பால் கோட்டை தகர்ந்து, திராவிட அரசியல் தோற்றே போய்விட்டது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications