மனோஜுக்காக மெரினாவில் போடப்பட்ட அச்சு அசல் தாஜ்மகால் செட்! ரோபோவிலும் கலக்கிய பாரதிராஜா மகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாஜ்மகால் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்காக சென்னை மெரினா கடற்கரையில் தாஜ்மகாலை போல் ஒரு செட் போட்டு படமாக்கப்பட்டது. இந்த படத்தில் பாரதிராஜா மகன் மனோஜ் நடித்திருந்தார். இதில் ரியா சென் கதாநாயகியாக நடித்திருந்தார்.

83 வயதாகும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமான நிலையில் அவர் நடித்த தாஜ்மகால் படம் குறித்த பேச்சு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் வரை உதவி இயக்குநராக இருந்த மனோஜ் முதல் முறையாக தாஜ்மகாலில் நடித்தார்.

Manoj Bharathiraja

இரு படம் இரு கிராமங்களுக்கிடையே நடக்கும் பகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மனோஜுக்கும் ரியா சென்னும் முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்துவிடுகிறது. இந்த காதலை அவர்களின் பெற்றோர் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் ரியா சென்னுக்கு அவருடைய வீட்டில் வேறு மாப்பிள்ளையை பார்க்கிறார்கள். அவரை அவர் மணக்கிறாரா இல்லையா என்பதுதான் கதை! இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இருந்தன. இதற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், பாடல் வரிகள் வைரமுத்து.

திருப்பாச்சி அரிவாள தூக்கிகிட்டு வாடா வாடா என்ற பாடலும் சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு பாடலும் மிகவும் பிரபலம்! இந்த பாடல்கள் அன்றைய காதலர்களுக்கு மிகவும் பிடித்தமானவை!

அது போல் மனோஜ், ரோபோ படத்தில் டூப்பாக நடித்தார். அதாவது ரஜினி சிட்டியாக இருந்தால் இவர் வசீகரனாகவும், வசீகரனாக இருந்தால் சிட்டியாகவும் ஒரு சில சீன்களுக்கு மட்டும் டூப் போட்டார். அப்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு மனோஜ் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ரஜினி சாருக்கு ரோபோவுக்கான லென்ஸை கண்ணில் பொருத்த வேண்டும். அவர் உடனே , மனோஜை வரச்சொல்லுங்கள், அவர் சரியாக செய்வார் என்றாராம். உடனே நான் போனேன், அப்போது அவரிடம் சார், "கண்களை மேலேயும் கீழேயும் பார்க்காமல் நேராக பாருங்கள் வைத்து விடுகிறேன்" என்றேன். ஆனால் அவர் கண்கள் துடிப்பானவை என்பதால் ஒரு இடத்தில் பார்க்க முடியவில்லை, 10 , 15 நிமிடம் போராடிவிட்டு, சார் நான் உங்கள் கண்ணை குத்திவிட்டால் உங்கள் ரசிகர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் என்றேன். உடனே ரஜினி சார் கொள்ளென சிரித்துவிட்டார்.

அது போல் ஐஸ்வர்யா ராய்க்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது எனது தந்தையின் பெயரை சொல்லி, அவருடைய மகன் இவர் என சொல்லிவிட்டு இவரோட தந்தைதான் எனக்கு 16 வயதினிலே படத்தில் சம்பளத்தில் ரூ 500 பாக்கி வைத்துவிட்டார் என்றார். சார் இதையெல்லாம் அவங்க கேட்டாங்களா சார் என சிரித்துக் கொண்டே சொன்னேன். இப்படியாக பல நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு ரூ 3000 ஊதியம் பேசிய பாரதிராஜா, திடீரென ரூ 2500 கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 500-ஐ கொடுக்காமல் விட்டுவிட்டார். அதை தொடர்ந்து அவரை பார்க்கும் போதெல்லாம் ரஜினி கேட்டுக் கொண்டே இருந்தார் என அவரே சில மேடைகளில் காமெடியாக தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+