சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபையில் பிப். 23ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 2ஆம் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Interim budget to be presented in Tamil Nadu assembly on February 23

இக்கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தற்போதய அதிமுக அரசால் தாக்கல் செய்ய முடியும். துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 23ஆம் தேதி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

சட்டசபைத் தேர்தலையொட்டி மக்களைக் கவரும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The interim budget is scheduled to be tabled in the Tamil Nadu Assembly on the 23rd. Deputy Chief Minister and Finance Minister O. Panneer files wealth. Various announcements are likely to be made as the assembly elections approach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X