சேரை எடுத்து போடு.. புஸ்ஸி ஆனந்தை சத்தமின்றி அமுக்கிட்டாங்களே.. தவெகவில் பூகம்பம்.. விஜய் முடிவு?
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. சமீப வாரங்களாக, கட்சியின் முக்கிய கூட்டங்கள் பலவற்றை மூத்த நிர்வாகி ஜான் ஆரோக்கியசாமி முன்னின்று நடத்தியுள்ளார். கட்சியில் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளாதது, கட்சித் தலைமைக்குள் வளர்ந்து வரும் பிளவுகள் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.

கரூரில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கட்சி மாநிலத் தலைமைக்கு அழுத்தத்தை கொடுத்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அதன்பின் கடந்த வாரம்தான் அவர் வெளியே வந்தார். ஆனால் அதற்கு பின்பும் கூட அவர் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார்.
புஸ்ஸி ஆனந்த் வந்த பின்பும் கூட, ஜான் ஆரோக்கியசாமிதான் கட்சி மீட்டிங்குகளை நடத்துகிறார். பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நடத்த வேண்டிய மீட்டிங்குகளை.. ஜான் ஆரோக்கியசாமி பல மாவட்டங்களில் நடத்துகிறார். அமைப்பு ரீதியான கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார். இதனால் அடிமட்டத் தொண்டர்களிடையே அவரது செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி
சேரை எடுத்து போடுங்க.. ஜான் ஆரோக்கியசாமிக்கு நடு சீட் என்று சொல்லும் அளவிற்கு அவர்தான் மையத்தில் இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டார். உள்ளூர் கூட்டங்கள் மற்றும் மாவட்ட கூட்டங்கள் உட்பட கட்சி நடவடிக்கைகளில் ஆரோக்கியசாமியின் சமீபத்திய கட்டுப்பாடு, மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.
புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதா என கட்சித் தொண்டர்கள் ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். அவரது தலைமறைவு தலைமை வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஆரோக்கியசாமி, மாவட்ட அளவிலான தலைவர்களுடன் சுறுசுறுப்பாக இணைந்து செயல்பட்டு அந்த இடத்தை நிரப்பினார் என்று சிலர் கூறுகின்றனர்.
புஸ்ஸி ஆனந்த் மீது ஆக்சன்
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகி இருந்தனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். கட்சியின் முகமாக இருப்பவர் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்தே 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தார். அதன்பின்தான் வெளியே வந்தார் .
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. விஜய்.. ஏன் புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை அம்போ என்று விட்டுவிட்டு சென்ற அவர் மீது விஜய் ஏன் ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. விஜய் அவரிடம் சிக்கிக்கொண்டது போல செயல்படுகிறார். அவரை இனியும் ஏன் நம்புகிறார். ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் இப்படி விட்டு இருப்பார்களா? விஜய் அவர்களை போல ஆக ஆசைப்படுகிறார்.. ஆனால் அப்படி ஆக்சன் எடுக்கவில்லை என்று கட்சிக்கு உள்ளே புகார் எழுந்துள்ளதாம்.
உட்கட்சி மோதல்
ஏற்கனவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதன் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகள் இப்போது பகிரங்கமான போட்டியாக மாறி, இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கட்சி வட்டாரங்களின்படி, ஆனந்த் மற்றும் அர்ஜுனா இடையேயான இந்த மோதல் பல வாரங்களாகவே புகைந்துகொண்டிருக்கிறது. இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு மற்றும் பரப்புரை வியூகங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பான வேறுபாடுகளே இந்த மோதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முக்கியமாக கரூர் விவாகரத்திற்கு பின் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு உச்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications