ஸ்டாலின் ஆட்சியும்.. காமராஜர் ஆட்சியும் ஒன்னா? காங்கிரஸில் கலகக் குரல்! வெடித்துக் கிளம்பிய மா.தா..!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை காமராஜர் ஆட்சியைப் போல பார்ப்பதாக கூறியிருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப் பெருந்தகை. இந்த நிலையில் காமராஜர் ஆட்சியை பார்க்காத படித்து தெரிந்து கொள்ளாதவர்கள் அதை 'மற்றவைகளுடன்' ஒப்பிடுவது தவறு என வெளிப்படையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் அக்கட்சி எம்பியான மாணிக்கம் தாகூர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இருக்கும் நிலையில் மாணிக்கம் தாகூரின் விமர்சனம் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கைகலப்பும் என்பார்கள். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும் கோஷ்டி பூசல் மட்டும் முடிவடைந்ததே கிடையாது. திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது செல்வப் பெருந்தகை வரை பல தலைவர்கள் மாறிவிட்டாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு ஆதரவாளர் வட்டத்தை பெருக்கிக் கொண்டு கட்சிக்குள்ளேயே அரசியல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கேஎஸ் அழகிரி, ப.சிதம்பரம் என காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டிகள் ஏராளம். தற்போதைய சூழலில் பரபரப்பாக இருப்பது மாணிக்கம் தாகூர் - செல்வப் பெருந்தகை இடையேயான மோதல் தான்.
பல கட்சிகள் கடந்து வந்தாலும் எம்எல்ஏ ஆகி அதற்குப் பிறகு தலைவரானவர் செல்வப் பெருந்தகை. அவருக்கும் விருதுநகர் எம்பி ஆன மாணிக்கம் தாகூருக்கும் ஏழாம் பொருத்தம் தான். செல்வப் பெருந்தகை ஏதாவது ஒன்று பேசினால் அதற்கு மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றுவதும் வழக்கம். தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் அவர்களது குடும்பமே விளங்காது என மாணிக்கம் தாகூர் முன்னிலையில் பேசியது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் தான் இவ்வளவு நாள் காத்திருந்த மாணிக்கம் தாகூர் தற்போது செல்வப் பெருந்தகைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை," திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை காமராஜர் ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம்" எனக் கூறியிருந்தார். அதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்தியாவின் பல மாநிலங்களில் அஸ்தமனம் ஆகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவின் தயவால் ஒரு சில எம்பிக்களும் எம்எல்ஏக்களும் இருக்கின்றனர். இதனால் திமுக தலைமையுடன் இணக்கமாக செல்வதையே தமிழக காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. அதை ஒட்டியே செல்வப் பெருந்தகை இவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால் காமராஜரையும் ஸ்டாலினையும் எப்படி ஒப்பிடலாம் என சமூக வலைதளங்களில் செல்வப் பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேரடியாகவே செல்வபெருந்தகையை விமர்சித்திருக்கிறார் விருதுநகர் எம்பியும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத , படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. அன்பு தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜ் ஆட்சி, அது உண்மையான காங்கிரஸ் கார்களின் கனவு. ஒரு நாள் அது நடக்கும்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதை அடுத்து மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதற்கு செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிறகு லோக்சபா தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சியுடன் இணக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் அப்படி பேசினார். அதற்காக காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவார் என்பது போல பேசுவது நல்லதல்ல" என பதிவிட்டு வருகின்றனர்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications