ரிப்போர்ட் அடிங்க.. கண்ணாடி போல.. விஜய் கண் முன் உடைந்த கோட்டை.. இதை எதிர்பார்த்து இருக்க மாட்டாரே
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதன் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகள் இப்போது பகிரங்கமான போட்டியாக மாறி, இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கட்சி வட்டாரங்களின்படி, ஆனந்த் மற்றும் அர்ஜுனா இடையேயான இந்த மோதல் பல வாரங்களாகவே புகைந்துகொண்டிருக்கிறது. இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு மற்றும் பரப்புரை வியூகங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பான வேறுபாடுகளே இந்த மோதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முக்கியமாக கரூர் விவகாரத்திற்கு பின் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு உச்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

எக்ஸ் பக்கத்தில் மோதல் ஆதவ் அர்ஜுனா - விஜய்
இந்த மோதல் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவியுள்ளது கட்சியினரையும், ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் எதிர்த் தரப்பு ஆதரவாளர்களின் சமூக ஊடகப் பக்கங்களை குறிவைத்து report அடித்து புகார் அளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதவ் அர்ஜுனாவின் குழு புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய கணக்குகளைக் ரிப்போர்ட் செய்ததாகவும், ஆனந்தின் ஆதரவாளர்கள் அதற்குப் பதிலடியாக அதேபோலச் ஆதவ் அர்ஜுனா ஆதரவு ஐடிக்களை ரிப்போர்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், விஜய்யின் அரசியல் பிம்பத்தையும் தீவிரமாகப் பரப்பி வந்த பல பிரபலமான பக்கங்கள், தொடர்ச்சியான புகார்களின் காரணமாக நீக்கப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன.
தவெக உட்கட்சி மோதல்
இந்த உள் மோதல், கட்சியின் களப் பணியாளர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. வரவிருக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு முன்னதாக, இந்தச் சண்டை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுப் பிம்பத்தைப் பாதிக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து வலியுறுத்தி வரும் ஒற்றுமைக்கும், ஒழுக்கத்திற்கும் இந்த உட்கட்சிப் பூசல் முரணாக இருப்பதாகப் பலரும் உணர்கின்றனர்.
இந்த உள் அதிகாரப் போட்டி பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வரவிருக்கும் தேர்தலுக்கான தனது அரசியல் போட்டி வியூகத்தை விஜய் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இத்தகைய உட்கட்சிப் பிரச்சனைகள் கட்சியின் வேகத்தைக் குறைக்கலாம்.
தவறான புரிதல்
இதற்கிடையில், இரு தலைவர்களுக்கும் நெருக்கமானவர்கள் இந்த மோதல் குறித்த செய்திகளை நிராகரித்து, அதை வெளிநபர்களால் பெரிதுபடுத்தப்பட்ட சிறிய தவறான புரிதல்கள்.. இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் இல்லை.. அடிமட்டத்தில் சில மோதல்கள் இருக்கலாம்.. ஆனால் மேலே எந்த மோதலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகி இருந்தனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். கட்சியின் முகமாக இருப்பவர் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்தே 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தார். அதன்பின்தான் வெளியே வந்தார் .
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. விஜய்.. ஏன் புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை அம்போ என்று விட்டுவிட்டு சென்ற அவர் மீது விஜய் ஏன் ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. விஜய் அவரிடம் சிக்கிக்கொண்டது போல செயல்படுகிறார். அவரை இனியும் ஏன் நம்புகிறார். ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் இப்படி விட்டு இருப்பார்களா? விஜய் அவர்களை போல ஆக ஆசைப்படுகிறார்.. ஆனால் அப்படி ஆக்சன் எடுக்கவில்லை என்று கட்சிக்கு உள்ளே புகார் எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications