விஜய் எழுச்சியை பாராட்டும் அமெரிக்க ஊடகங்கள்.. தமிழக தேர்தல் குறித்து சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சர்வதேச ஊடகங்களும் இந்த முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடி வருகை ஆகியவை உலகளாவிய தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை விஜய்யின் தவெக வீழ்த்தியது. மேற்கு வங்கத்தில் மம்தா அரசை பாஜக வீழ்த்தியது. அதேபோல இடதுசாரிகள் வசம் இருந்த கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அசாமில் பாஜகவும், புதுச்சேரியில் என்டிஏவும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

International Media on Tamil nadu election

பிரிட்டன்

பிபிசி (BBC): "மோடியின் பாஜக வங்கத்தை வென்றது" என்று குறிப்பிட்ட பிபிசி, இது பிரதமர் மோடியின் 12 ஆண்டுக்கால ஆட்சியில் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, கிழக்கு இந்தியாவில் பாஜகவின் நீண்ட காலப் பயணத்தின் நிறைவு என்றும் அது குறிப்பிட்டுள்ளது..

The Guardian: மேற்கு வங்கத்தில் ஒரு எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்ததாகச் சுட்டிக்காட்டிய கார்டியன், பாஜகவின் இந்த வெற்றி பலவீனமடைந்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மற்றொரு தடையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா

நியூயார்க் டைம்ஸ்: மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றியை "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாத விஜய் கட்சி, பாரம்பரியக் கட்சிகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டு ஒரு பெரிய ஆச்சரியத்தைத் தந்துள்ளதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட்: இந்த முடிவுகள் பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருப்பதையும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான்

Dawn: ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் குறிப்பை வெளியிட்ட டான் பத்திரிகை, எதிர்க்கட்சிகளின் வசமிருந்த மேற்கு வங்கத்தைப் பிரதமர் மோடியின் கட்சி கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது 2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாகப் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைச் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கும் என்றும் அது கூறியுள்ளது.

வங்கதேசம்

Dhaka Tribune: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியை இழந்தது மிகப் பெரிய தேர்தல் அதிர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளது. விஜய் தொடங்கிய புதிய கட்சியிடம் திமுக தோல்வி அடைந்ததை அந்த இதழ் பிரதானப்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை "காவி அலை வங்காளத்தை அடைந்தது" என்றும், தமிழ்நாட்டில் புதிய சக்திகள் உருவெடுத்திருப்பதாகவும் பதிவு செய்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+