அப்படி போடு.. ஓட்டு போட வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை 7 மணிக்கு தமிழகத்தில் ஜனநாயக பெருவிழாவான லோக்சபா தேர்தல் தொடங்கியது. இந்த நிலையில், வாக்குச்சாவடியின் வரிசை நிலையை நம் வீட்டில் இருந்தே அறிந்துகொள்ளும் வகையில் வாக்காளர்களுக்கு புதிய வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடக்கிறது.

Introduction of the New facility to know how many people are waiting in line at the polling station

தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவிட்டது. நாளை வாக்களார்கள் ஓட்டளிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துவிட்டது.

புது வசதி அறிமுகம்: அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவிபாட் எந்திரம், வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படும் மை, வாக்களார்கள் லிஸ்ட் என அனைத்து அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாக்களர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஓட்டுச்சாவடி வரிசை நிலை: வழக்கமாக ஓட்டுச்சாவடியில் அதிக நபர்கள் குவிந்தால், அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுவார்கள். ஜனநாயக கடமையாற்ற அனைத்து வாக்காளர்களும் எவ்வளவு நீண்ட வரிசையாக இருந்தாலும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றுவர். இதனை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாக்குச்சாவடியின் வரிசை நிலையை நாம் வீட்டில் இருந்தே அறிந்துகொள்ளும் வசதி தான்.

இணையதள லிங்: இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வாக்காளர்களின் வசதிக்காக, லோக்சபா தேர்தல்கள் 2024 க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ இந்த இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். என்று தெரிவித்துள்ளது.

எப்படி தெரிந்துகொள்ள முடியும்: இந்த வசதி எப்படி செயல்படும் என்றால்.. https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் 'வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை' என்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு கீழே.. மாவட்டத்தின் பெயர், தொகுதியின் பெயர், வாக்குச்சவடியின் விவரம்.. உள்ளிட்டவை கொடுக்க வேண்டும்.

நமது வாக்குச்சாவடி விவரம் தெரிந்து இருந்தால் இந்த ஆப்ஷனில் போய் செக் செய்து கொள்ளலாம். காலை 7 மணி முதல் இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒருவேளை வாக்குச்சாவடி தெரியவில்லை என்றால் சட்டமன்ற தொகுதியை கிளிக் செய்து அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+