5 லட்சம் முதலீடு பண்ணினால் வட்டி மட்டுமே 2 லட்சம் கிடைக்கும்! போஸ்ட் ஆபிசின் இந்த திட்டம் தெரியுமா?
சென்னை: போஸ்ட் ஆபிசில் வங்கிகளை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சிறப்பான சேமிப்புதிட்டங்கள் உள்ளன. முதலீடு பாதுகாப்பாக இருப்பதோடு, அதிக வட்டியும் கிடைக்கும் ஒரு சூப்பர் திட்டம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் எதிர்கால நலனுக்காக கொஞ்சம் சேமித்து வைக்க விரும்புவதுண்டு. ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் சிலவற்றைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய நினைப்பார்கள். பாதுகாப்பான முதலீட்டோடு வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பபடுவார்கள்.

சேமிப்பு திட்டம்: நாம் செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உறுதி இருப்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் முதலீடு செய்வது தற்போது அதிகரித்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு, உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதனால் மக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் அஞ்சலக திட்டங்கள் எப்போதுமே உள்ளது.
வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும், முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு நன்மையை தரக்கூடியது. இதனால் தற்போது பொது மக்கள் மத்தியில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
டைம் டெபாசிட் திட்டம்: பல்வேறு திட்டங்களை கொண்ட போஸ்ட் ஆபிசில் அதிக வட்டி அளிக்க கூடிய ஒரு அருமையான திட்டம் ஒன்றை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். அதாவது 5 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் கிடைக்கும்.... போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் இந்த பலன் கிடைக்கும்... இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
Post office Time Deposit Scheme என்ற ஐந்தாண்டு திட்டத்தில், பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டும் இன்றி நல்ல வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.5 சதவிகித வருடாந்திர வட்டி வழங்கப்படும். இந்த டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் ஆகிய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.
2 லட்சம் கிடைக்கும்: ஆனால் முதலீடு செய்யும் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். அதாவது, ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்தால் 6.9% வட்டியும், 2, 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7 % வட்டியும், 5 ஆண்டுகள் என்றால் 7.5% வட்டியும் கிடைக்கும். இதன்படி பார்த்தால் 5 ஆண்டு சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் 7.5 வட்டியுடன் ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் கிடைக்கும். இதன்படி பார்த்தால் வட்டி மட்டுமே 2 லட்சம் கிடைக்கும்.
ஜாயிண்ட் அக்கவுண்ட்: இந்த டைம் டெபாசிட் திட்டத்திற்கு வருமான வரி விலக்கையும் பெற முடியும். வருமான வரித்துறை விதிகள் 80 C படி இதற்கு வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தின் ஜாயிண்ட் அக்கவுண்ட், சிங்கிள் அக்கவுண்ட் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். இதில், வட்டியானது ஆண்டு அடிப்படையில் தானாகே முதலீட்டு தொகையுடன் சேர்ந்து விடும்.












Click it and Unblock the Notifications