Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி எம்பி மஸ்தான் மரணத்தில் திருப்பம்.. நெஞ்சு வலியால் உயிரிழக்கவில்லை! 5 பேரிடம் போலீசார் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்பியும் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் அக்கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளராக இருந்த டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் அதன் பிறகு திமுகவில் இணைந்து நிலையில் சிறுபான்மையினர் நலப்பிரிவு பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் சிறுபான்மை ஆணைய துணை தலைவராகவும் இருந்து வந்தார்.

 மாஜி எம்பி மஸ்தான்

மாஜி எம்பி மஸ்தான்

சென்னை சேப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மஸ்தானின் மகனுக்கு கடந்த 22ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து காரி கூடுவாஞ்சேரி அருகே தனது காரில் மஸ்தான் சென்று கொண்டிருந்தார்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் நெஞ்சு வலியோடு வலிப்பும் ஏற்பட்டதாக கூறி அவருடன் காரில் சென்றவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே மஸ்தான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 இரங்கல்

இரங்கல்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டுவரப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மஸ்தானின் மரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தன் மீது தனி மரியாதையும் பற்றும் கொண்டிருந்த மஸ்தான் இயக்க உணர்வை நெஞ்சில் இருந்து பணியாற்றிய செயல்வீரர் அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்த நிலையில் இயற்கைக்கு மாறாக முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவரது மர்ம மரணம் வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் எம்பி மஸ்தானின் கார் ஓட்டுநர் உள்ளிட்ட சிலரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது உடற்கூறு ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னாள் எம்பி மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் அதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+