Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்ஐசியில் மாதம் ₹462 முதலீடு.. 20 வருடம் கழித்து கிடைத்தது ₹1.5 லட்சம் தான்.. நெட்டிசன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பியூஷ் டிரேட்ஸ் என்பவர் வெளியிட்ட பதிவில் "எனது உறவினர் ஒருவர் 2006-ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசியில் மாதம் ₹462 முதலீடு செய்து வந்தார். 20 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, இந்த ஆண்டு முதிர்வுத் தொகையாக அவருக்கு ₹1.5 லட்சம் கிடைக்கப் போகிறது. இது பணவீக்கத்தின் விகிதத்தில் பாதியைக் காட்டிலும் குறைவானது. அவர் இதே தொகையை ஒரு வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்திருந்தால் அவருக்கு ₹2.41 லட்சமும், மியூச்சுவல் ஃபண்டில் (12% வருமானம் எனக்கொண்டால்) ₹4.75 லட்சமும் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

பியூஷ் டிரேட்ஸ் என்ற பெயரில் ஒரு நெட்டிசன் எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவில் "எனது உறவினர் ஒருவர் 2006-ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசியில் மாதம் ₹462 முதலீடு செய்து வந்தார். 20 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, இந்த ஆண்டு முதிர்வுத் தொகையாக அவருக்கு ₹1.5 லட்சம் கிடைக்கப் போகிறது.

Investing 462 per month in LIC What you need to know about the amount received after 20 years

இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 2.98% ஆகும், இது பணவீக்கத்தின் விகிதத்தில் பாதியைக் காட்டிலும் குறைவானது. அவர் இதே தொகையை ஒரு வங்கி வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்திருந்தால் அவருக்கு ₹2.41 லட்சமும், மியூச்சுவல் ஃபண்டில் (12% வருமானம் எனக்கொண்டால்) ₹4.75 லட்சமும் கிடைத்திருக்கும்.

எல்ஐசி பாலிசிகள் அதன் முகவர்களையும் ஊழியர்களையும் தான் பணக்காரர்களாக்குகின்றன, முதலீட்டாளர்களை அல்ல. அதன் பங்குகள் கூட கடந்த 3.5 ஆண்டுகளில் வெறும் 0.34% வருமானத்தை மட்டுமே கொடுத்துள்ளன.

உங்களுக்கு எல்ஐசி பாலிசிகளை விற்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து தள்ளி இருங்கள்; ஏனெனில் அவர்களுக்கு உண்மை நிலை தெரியும். அப்படித் தெரிந்துமே அவர்கள் உங்களுக்கு அதை விற்கிறார்கள் என்றால், அவர்கள் உங்கள் நலனில் அக்கறை இல்லாத பேராசை பிடித்தவர்கள்." என்று காட்டமாக கூறியுள்ளார்.

Investing 462 per month in LIC What you need to know about the amount received after 20 years

இதுபற்றி பொருளாதார நிபுணர்களிடம் பேசியது போது, அவர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம். பியூஷ் முன்வைத்திருக்கும் வாதங்களில் உள்ள கணக்குகள் உண்மை தான். முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது கிடைக்கும் வருமானம் அது. எனவே மற்ற முதலீட்டுத் திட்டங்களை விடக் குறைவாகவே இருக்கும்.

எல்ஐசி மற்றும் இதுபோன்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் சாதக, பாதகங்களை விரிவாகப் பார்ப்போம்:

1. ஏன் வருமானம் குறைவாக இருக்கிறது? (நஷ்டம் என கருதப்படுவது)

நிர்வாகக் கட்டணங்கள்: உங்கள் உறவினர் கட்டும் ₹462 தொகையில் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியமாகவும் (Risk Cover), மற்றொரு பகுதி முகவர் கமிஷன் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கும் பிரிந்துவிடும். மீதமுள்ள தொகை மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.

குறைந்த வட்டி விகிதம்: எல்ஐசி பெரும்பாலும் பாதுகாப்பான அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதால், அதில் கிடைக்கும் போனஸ் விகிதம் 3% முதல் 5% வரை மட்டுமே இருக்கும்.

பணவீக்கம் : அவர் குறிப்பிட்டது போல, 20 ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கும். ₹1.5 லட்சம் என்பது 2006-ல் பெரிய தொகையாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் 2026-ல் அதன் வாங்கும் சக்தி மிகக் குறைவு.

2. எல்ஐசியால் கிடைக்கும் லாபம் என்ன?

குறைந்த வருமானம் இருந்தாலும், மக்கள் ஏன் இன்னும் இதில் முதலீடு செய்கிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன

உத்தரவாதமான பாதுகாப்பு: பங்குச்சந்தை வீழ்ந்தாலும் அல்லது வங்கி திவாலானாலும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு அரசு உத்தரவாதம் உண்டு. இது ஒரு "Safe Haven" ஆகக் கருதப்படுகிறது.

ஆயுள் காப்பீடு: முதலீட்டு காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர் கட்டிய தொகையை விட பல மடங்கு அதிகமான தொகை அவரது குடும்பத்திற்குக் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டில் இந்த உடனடிப் பாதுகாப்பு கிடைக்காது.

கட்டாயச் சேமிப்பு: பலருக்கும் ஒழுங்காக முதலீடு செய்யும் பழக்கம் இருக்காது. எல்ஐசி போன்ற திட்டங்கள் நீண்ட காலத்திற்குப் பணத்தைச் சேமிக்க வைக்கின்றன.

வரிச் சலுகை: பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு மற்றும் முதிர்வுத் தொகைக்கு (10(10D)) வரி இல்லாதது கூடுதல் லாபம்.

எப்போதும் "காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்து பார்ப்பது நல்லது"

Term Insurance: மிகக் குறைந்த பிரீமியத்தில் (உதாரணமாக ஆண்டுக்கு ₹10,000) ₹1 கோடி வரை ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

SIP/Mutual Funds: மீதமுள்ள தொகையை நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல லாபம் கிடைக்கும்.

முடிவு: பியூஸ் கூறியது போல, ஒரு "முதலீடாக" பார்த்தால் எல்ஐசி நஷ்டமே. ஆனால், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு "நிச்சயமான ஒரு தொகை கிடைக்கும்" என்ற மன அமைதியை அது வழங்குகிறது. நீங்கள் எல்ஐசியை காப்பீடுக்காக அல்லாமல் முதலீடு நோக்கத்தில், அதிக லாபம் எதிர்பார்க்கும் இளம் வயதினராக இருந்தால், எல்ஐசியை விட மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் கலவை சிறந்தது என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+