பைக்கிற்கு பெட்ரோல் போடுங்க.. சொகுசு காரை ஓட்டிச் செல்லுங்க.. ஐஓசியின் சூப்பர் டூப்பர் ஆஃபர்
சென்னை: ரூ 200-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு அறுபது நாட்களில் காத்திருக்கும் சொகுசு கார் பம்பர் பரிசு பெறுவது நீங்களாகவும் இருக்கலாம்... என இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் நடத்தப்பட்ட அறுவடை 60 விழாவில் அறிவிப்பு வெளியானது.
Recommended Video
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விற்பனையை மேம்படுத்த வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் மண்டல இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் விற்பனை மேம்படுத்துவதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகில் உள்ள வாயில் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.

60 நாட்கள்
60 நாட்களில் ரூ 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒரு நபருக்கு சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3000 பேருக்கு பரிசு
மேலும் இரண்டாவது பரிசாக இரண்டு நபர்களுக்கு 10 ஆயிரம் வீதமும், மூன்றாவது பரிசாக 60 நபர்களுக்கு 1000 ரூபாய் வீதமும், நான்காம் பரிசாக ஆயிரம் நபர்களுக்கு டைட்டன் மூக்கு கண்ணாடியும் ஐந்தாம் பரிசாக 3000 நபர்களுக்கு முகக் கவசம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள்
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதன்மை மேலாளர் சரத்பாபு முதுநிலை மேலாளர் அப்பன் டிராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மண்டல பொது மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த பம்பர் பரிசுகளை அறிவித்தார்.

பரிசுகள்
இதனால் இனி ரூ 50-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் ரூ 200-க்கு பெட்ரோல் போட்டாலும் போடுவர் என்கிறார்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள். மேலும் 60 நாட்களில் பெட்ரோல் போடும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கார் இல்லாவிட்டாலும் ஏதேனும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications