சீனியர் என்ற திமிரா.. தோனி கிட்ட இப்படி பண்ண முடியுமா? அஸ்வின் செய்த காரியம்.. பெரும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என்று நேற்று அஸ்வின் செய்த ஒரு காரியத்தால் ஜெயிக்க வேண்டிய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து இருக்கிறது.

மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பைனல்ஸ் சென்றுள்ளது. இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவை கொல்கத்தா எதிர்கொள்ள உள்ளது.

நேற்று குவாலிபயர் 2ம் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் டெல்லி வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அஸ்வின்

அஸ்வின்

இந்த போட்டியில் அஸ்வின் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. நேற்று 15 ஓவர்கள் முடியில் கொல்கத்தா அணி 113 ரன்கள் எடுத்து இருந்தது. வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கொல்கத்தா இழந்திருந்தது. ஆனால் அதன்பின்தான் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நார்ட்ஜ் வீசிய 16 ஓவரில் 10 ரன்கள் செல்ல 1 விக்கெட் விழுந்தது. இதன் பின் வரிசையாக கொல்கத்தா அணி விக்கெட்டை இழந்தது.

மாற்றம்

மாற்றம்

ஆவேஷ் கான் போட்ட 17வது ஓவரில் வெறும் 2 ரன்கள் சென்றது. அதோடு 1 விக்கெட்டும் இழந்தது. பவுன்சர், ஸ்லோ பால், யார்க்கர் என்று மாற்றி மாற்றி இவர் வீசிய ஓவரில் கொல்கத்தா அணி கலங்கி போனது. இளம் வீரர் என்றாலும் இந்த தொடர் முழுக்கவே ஆவேஷ் கான் சிறப்பான பவுலிங் செய்தார். நேற்றும் இவரின் பவுலிங்கில் பெரிய அளவில் முதிர்ச்சி காணப்பட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் டெல்லியின் கைகளுக்கு வந்தது.

Recommended Video

    அவுட் ஆனதும் Dinesh Karthik செய்த செயல்.. என்ன தண்டனை கிடைக்கும் ? | Oneindia tamil
    ஆவேஷ் கான்

    ஆவேஷ் கான்

    மீண்டும் 18வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவர்தான் மொத்தமாக ஆட்டத்தை புரட்டி போட்டது. வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்த ராபாடா 1 விக்கெட் எடுத்தார். அந்த ஓவரில் பந்தை தொட கூட முடியாமல் ராகுல் திரிப்பாதி கஷ்டப்பட்டார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அடிக்க கூடிய இலக்குதான்.

    ரபாடா

    ரபாடா

    ஆனால் 19வது ஓவரை வீசியது நார்ட்ஜ். அந்த ஓவரில் அவர் கொடுத்து வெறும் 3 ரன்கள்தான். அதோடு இயான் மோர்கன் விக்கெட்டையும் எடுத்தார். இதனால் மொத்தமாக கொல்கத்தா அணி நிலை குலைந்தது. கிரீஸில் ராகுல் திரிப்பாதி மட்டுமே இருந்தார். அவர் மட்டுமே ப்யூர் பேட்ஸ்மேன். கடைசி ஓவரை சீனியர் என்று நம்பி அஸ்வினிடம் பேண்ட் கொடுத்தார்.

    அஸ்வின்

    அஸ்வின்

    முதல் பாலில் சிங்கிள் சென்றது. அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் வரிசையாக ஷாகிப், நரேன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார். இவர்கள் கிரீஸில் இருந்த போது அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மாற்றினார். கையை ஒரு மாதிரி சுழற்றி இழுத்து பவுலிங் செய்தார். அஸ்வினின் இந்த பவுலிங் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பொதுவாக அஸ்வின் ஐபிஎல் போன்ற போட்டிகளில் நிறைய சோதனை முயற்சிகளை செய்வார்.

    பவுலிங்

    பவுலிங்

    நேற்றும் இதேபோல் தான் போட்ட நான்கு ஓவரில் சோதனை முயற்சிகளை செய்தார். இவரின் பவுலிங் முதல் மூன்று ஓவரில் சொதப்பியது. ஆனாலும் பவுலிங் ஸ்டைலை மாற்றாமல் வித்தியாசமாக அஸ்வின் வீசினார். அதில் நரேன், ஷாகிப் விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார். ஆனால் இவர்கள் இருவரும் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள். இதனால் அஸ்வின் எளிதாக விக்கெட்டுகளை எடுத்தார்.

     பழைய ஸ்டைல்

    பழைய ஸ்டைல்

    ஆனால் அதன்பின் ராகுல் திரிப்பாதி கிரீஸுக்கு வந்ததும், ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு தனது பழைய ஸ்டைலில் அஸ்வின் வீசி இருக்க வேண்டும். ஆனால் அஸ்வின் அப்படி செய்யாமல் மீண்டும் கையை இழுத்து பவுலிங் செய்தார். ஜாதவ், சாவ்லா ஆகியோர் வீசுவார்களே அப்படி இருந்தது அஸ்வின் பவுலிங். இதை எளிதாக கணித்த ராகுல் பந்தை சிக்ஸ் அடித்து மேட்சை முடித்தார்.

    சிக்ஸ்

    சிக்ஸ்

    அஸ்வின் நேற்று கொஞ்சம் யோசித்து தனது வலிமையான பவுலிங் ஸ்டைலில் பழையபடி வீசி இருந்தால் டெல்லி வெற்றிபெற்று இருக்கும். ஆனால் "நான் தலை கீழாகத்தான் குதிப்பேன்" என்று அஸ்வின் செய்த காரியத்தால் 6 ரன்களை டிஃபன்ட் செய்ய முடியாமல் போனது. இவர் மூத்த வீரர். அணியில் மற்ற எல்லா வீரர்களும் கிட்டத்தட்ட இவரை விட இளையவர்கள். இதனால் அஷ்வினுக்கும் யாரும் பெரிதாக அறிவுரை சொல்லவில்லை.

     தோனி

    தோனி

    மூத்த வீரர் என்ற முதிர்ச்சி இன்றி அஸ்வின் செய்த செயல் அன்னிக்கே எதிராக திரும்பியது. தோனிக்கு கீழ் இதேபோல் சிஎஸ்கேவில் அஸ்வின் சில முறை சோதனை முயற்சிகளை செய்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் அஸ்வினை தோனி விமர்சனம் செய்து, மீண்டும் பழையபடி பவுலிங் செய்ய வைத்துள்ளார். தோனி இருந்திருந்தால் நேற்று அஸ்வின் இப்படி செய்திருக்க மாட்டார். ஆனால் பண்ட் என்பதால் அஸ்வின் தன் இஷ்டப்படி பவுலிங் செய்து அதுவே அணிக்கும் எதிராக திரும்பிவிட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+