என்னவேணா நடக்கலாம்! சூசகமாக சொன்ன தோனி.. அடுத்த சீசனில் ஆடுவதில் சிக்கல்.. பின்வாங்கிய தல?
சென்னை: சிஎஸ்கே அணியில் அடுத்த சீசனில் தோனி ஆடுவாரா மாட்டாரா என்பது குழப்பமாக உள்ளது. தோனி இன்று அளித்த பேட்டி காரணமாக பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு போட்டியில் தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கே ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்த முறை கோப்பை வெல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக உள்ளது. சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை மட்டும் கொஞ்சம் உள்ளது. இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்
இன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே 11 இன்றும் ஆடுகிறது. இன்றும் சிஎஸ்கே அணியில் ரெய்னா ஆடவில்லை. அவருக்கு தொடையில் சின்ன காயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் உத்தப்பாவிற்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிஎஸ்கே
கடந்த போட்டிக்கு பின்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேட்டி அளித்து இருந்தார். நான் இந்த வருடம் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். நான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திடீரென அறிவித்தேன். நான் ஓய்வை அறிவிக்க அதைவிட சிறந்த நேரம் கிடையாது. உங்களுக்கு தோன்றும் போது உடனே நீங்கள் ஓய்வை அறிவிக்க வேண்டும். பெரும்பாலும் அடுத்த வருடம் எனக்கு சென்னையில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கடைசி போட்டி
சென்னை சேப்பாக்கத்தில் எனக்கு விடைபெற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனது கடைசி போட்டி சென்னையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் தோனி இந்த வருடம் ஓய்வு பெற மாட்டார். அடுத்த வருடம்தான் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். தோனி இன்னும் ஒரு வருடம் ஆடுவார். அதுவே போதும் என்று தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மாற்றி பேசினார்
ஆனால் இன்று பேட்டி அளித்த தோனி, என்னை அடுத்த வருடம் நீங்கள் மஞ்சள் உடையில் பார்ப்பீர்கள். ஆனால் நான் சிஎஸ்கே அணியில் ஆடுவேனா இல்லையா என்பது உறுதி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கணிக்க முடியாத சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக அடுத்த வருடம் 2 அணிகள் வருகின்றன. இதனால் ரிட்டென்சன் எப்படி இருக்கும் என்று தெரியாது.

எத்தனை பேர்
எத்தனை வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களை ரிட்டென்சன் செய்ய முடியும் என்று தெரியாது. எவ்வளவு பணம் இதற்கு செலவாகும் என்று தெரியாது. இதனால் எதையும் இப்போது கணிக்க முடியாது. முழுமையான விதிகள் தெரியும் வரை எந்த முடிவையும் எடுக்க முடியாது. எல்லோருக்கும் நல்லதாக முடிவு வரும் என்று எதிர்பார்ப்போம், என்று தோனி குறிப்பிட்டார். அடுத்த வருடம் ஆட மாட்டேன் என்பதை தோனி சூசகமாக தெரிவிக்கிறாரோ என்ற ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பி உள்ளனர்.

தோனி முடிவு
தோனி அடுத்த வருடம் ஆடுவேன் என்று கூறியதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். பேட்டிங்கில் பார்மை இறந்துவிட்டதால் அவர் இப்போதே ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில்தான் தோனி இப்படி திடீரென எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அடுத்த வருடம் ஆடும் முடிவில் இருந்து தோனி பின்வாங்கிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications