பரிதாபம்.. சிஎஸ்கே மேட்ச் நடக்கும் போது.. நேரம் பார்த்து வார்னர் போட்ட ஸ்டோரி.. யாரை சொல்கிறார்?
சென்னை: சிஎஸ்கே ஹைதராபாத் மேட்ச் நடக்கும் நேரம் பார்த்து ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் சோகமான ஸ்டோரி ஒன்றை வைத்து இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அவரின் ஸ்டோரி கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே இன்றைய போட்டியில் வெல்வதன் மூலம் பிளே ஆப் செல்வதை உறுதி செய்துவிடும்.
அதே சமயம் ஹைதராபாத் ஏற்கனவே கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதில் முதலில்
பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டிற்கு 134 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் இன்று தோல்வி அடைந்தால் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிவிடும்.

மேட்ச்
இந்த தொடரில் ஹைதராபாத் அணி நிறைய தவறுகளை செய்தது. முதல் பாதியில் தேவையின்றி அணி தேர்வில் நிறைய தவறுகளை செய்தது. முக்கியமாக கேப்டனுக்கு வீரர்களை தேர்வு செய்வதில் போதிய சுதந்திரம் இல்லை. வார்னர் கேப்டனாக இருந்த சமயத்தில் அவரின் அனுமதி இன்றி அணியின் 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அணிக்கு எதிராக வார்னர் அப்போதே பேசியதாக கூறப்படுகிறது.

வார்னர் நீக்கம்
இந்த நிலையில்தான் கடந்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி ஆரம்பிக்கும் முன் வார்னர் களத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். நேற்று ஆட்டம் நடக்கும் போது வார்னர் களத்தில் காணப்படவில்லை. இவர் ஹோட்டலுக்கு உள்ளேயே இருந்தார். இன்னும் சில மூத்த வீரர்களும் ஹோட்டலுக்குள் இருந்தனர்.

தீவிரம்
இவர் மைதானத்திற்கு கூட வராதது பல கேள்விகளை எழுப்பியது. அணி நிர்வாகத்திற்கும் இவருக்கும் என்னதான் சண்டை என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில்தான் சென்னை போட்டிக்காக தீவிரமாக வார்னர் பயிற்சி எடுத்தார். ஆனால் இன்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு இல்லை
இதையடுத்து சென்னைக்கு எதிராக போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வார்னர், சரியாக போட்டி நடக்கும் நேரத்தில் முக்கியமான வாசகம் ஒன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு உள்ளார். அதில், உங்களுக்கு முகத்துக்கு நேராக யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது.உங்கள் முதுகுகிற்கு பின் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம், என்று குறிப்பிட்டுள்ளார். தன்னை யாரோ முதுகில் குத்தியது போல வார்னர் இப்படி ட்வீட் செய்துள்ளார்.

யாரை சொல்கிறார்?
வார்னர் யாரை பற்றி இப்படி பேசியுள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. அணி நிர்வாகம் பற்றி இப்படி பேசுகிறாரா, பயிற்சியாளர் பற்றி இப்படி சொல்கிறாரா, அணியில் இருக்கும் சக வீரர்கள் பற்றி இப்படி பேசுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இவரின் இந்த ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வார்னர் அடுத்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு ஆட பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹெல்மெட்டை தூக்கியெறிந்து.. ஆவேசமான ஸ்டப்ஸ்.. நடுவர்களுடன் மோதிய ராணா.. என்ன நடந்தது? -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
"எங்க சின்ன தல சுரேஷ் ரெய்னா மாதிரியே இருக்கு" வெற்றிக்கு பின் சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications