ஆறாத ரணம்.. தோனிக்கு சிம்ம சொப்பனமான 2 தமிழர்கள்.. பைனலில் இதுமட்டும் நடந்தா கப்பு சிஎஸ்கேவிற்குதான்
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் 2021 இறுதி போட்டியில் இன்று சிஎஸ்கே ஆட உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான இறுதி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் இருந்து இந்த வருடம் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன. தோனியும் கடந்த போட்டியில் நீங்கள் என்னை மஞ்சள் உடையில் பார்க்கலாம்.. ஆனால் அது வீரராகத்தானா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று இழுத்தார்.
தோனி பெரும்பாலும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணியின் ஆலோசகர் பொறுப்பிற்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி புதிய கேப்டனை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே
இந்த நிலையில்தான் தோனி கேப்டனாக எப்படியும் இந்த சீசனில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் தோனி 2 முக்கியமான சவால்கள் இருக்கின்றன. அதேபோல் சில சிக்கல்களும் இருக்கின்றன. இதை மட்டும் சரி செய்தால் போதும் இந்த போட்டியில் சிஎஸ்கே கண்டிப்பாக கோப்பையை வென்றுவிடும்.

ரணம்
இந்த போட்டியில் சிஎஸ்கே தனது ஆறாத ரணம் ஒன்றை ஆற்றிக்கொள்ள முடியும். 2014ல் நடந்த பைனலில் சிஎஸ்கே கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து ரெய்னாவின் 73, மைக் ஹஸ்ஸியின் 54 அதிரடி காரணமாக 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. எளிதாக சிஎஸ்கே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், கொல்கத்தாவின் பிஸ்லா 89, காலிஸ் 69 ரன்கள் அடிக்க சிஎஸ்கே கொல்கத்தாவிடம் வீழ்ந்தது.

பதிலடி
இந்த தோல்விக்கு இன்று சிஎஸ்கே பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 தொடரும் தற்போதைய தொடரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் சிஎஸ்கே இந்த முறை கொல்கத்தாவை வீழ்த்தி வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தாவின் ஸ்பின் பவுலிங், அவர்களின் ஓப்பனிங் இணை, சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் என்ற சில பிரச்சனைகள் தோனிக்கு இருக்கின்றன.

தோனிக்கு சிம்ம சொப்பனம்
தோனிக்கு இந்த போட்டியிலும் கண்டிப்பாக வருண் சக்ரவர்த்தி சிம்ம சொப்பனமாக இருப்பார். இதுவரை 4 முறை வருண் சக்கரவர்த்தியிடம் தோனி அவுட்டாகி இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் 2 முறை அவுட்டாகி உள்ளார். இதனால் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியிடம் தோனி அவுட்டாகாமல் இருப்பதே இன்று அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். மொத்த சிஎஸ்கேவும் இவரை எதிர்கொள்ளவே தனியாக திட்டம் போட்டுகொண்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ் ஐயர்
இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியின் ஓப்பனிங் வீரர் வெங்கடேஷ் ஐயர் மிக சிறப்பாக ஆடி வருகிறார். 2014ல் சிஎஸ்கேவிற்கு எதிராக பிஸ்லா ஆடியது போல இன்று வெங்கடேஷ் ஐயர் ஆடி ஆட்டத்தை மாற்றும் வாய்ப்புகளும் உள்ளன. இவரை ஆட விடாமல் வேகமாக விக்கெட் எடுத்தால் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெறும். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த வீரரும் இன்று தோனிக்கு குடைச்சலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா
கொல்கத்தாவின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளதால் வெங்கடேஷ் ஐயர், ராணாவை வீழ்த்திவிட்டால் சிஎஸ்கே எளிதாக அந்த அணியை சுருட்ட முடியும். அதேபோல் சாகிப், நரேன் ஆகியோரின் ஸ்பின் பவுலிங்கை பொதுவாகவே சிஎஸ்கே நன்றாக எதிர்கொள்ளும். இன்றும் அக்ராஸ் ஷாட் ஆடாமல் இறங்கி வந்து ஆடும் பட்சத்தில் சிஎஸ்கே அணி எளிதாக அவர்களின் ஸ்பின் படையை எதிர்கொள்ள முடியும். ராயுடு, ருத்துராஜ், டு பிளசிஸ் ஆகியோர் நன்றாக ஸ்பின் ஆடுவார்கள் என்பதால் கொல்கத்தாவின் மற்ற ஸ்பின் பவுலர்கள் சிஎஸ்கேவிற்கு பெரிய சவாலாக இருக்க மாட்டார்கள்.

மாற்றம்
இன்று சிஎஸ்கேவில் ஒரே பிரச்சனை மிடில் ஆர்டர்தான். மிடில் ஆர்டரில் இன்னும் மொயின் அலி சரியாக பர்மிற்கு வரவில்லை. ராபின் உத்தப்பா இன்றும் சிறப்பாக ஆட வேண்டும். அதேபோல் தோனியும் முழுமையாக பார்மிற்கு திரும்ப வேண்டும். வருண், நரேனை சமாளித்து.. வெங்கடேஷ் ஐயரை வீழ்த்தி.. சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் ஒரு மேஜிக்கை மட்டும் நிகழ்த்தினால் போதும் இன்று கண்டிப்பாக சிஎஸ்கேவிற்குத்தான் கோப்பை. நிறைய சவால்களான விஷயங்கள் இருப்பதால் இன்று கண்டிப்பாக சிஎஸ்கே கொல்கத்தா ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications