Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த ரசிகர் படையே எதிர்த்த போதும்.. தோனி செய்த மாஸ் செயல்.. இதுதான் தல! என்ன நடந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனி நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    CSK vs RCB: Chennai beat Bangalore by 23 runs to break 4-game losing streak| Oneindia Tamil

    2022 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வந்த சிஎஸ்கே அணி நேற்று முதல் போட்டியில் வெற்றிபெற்றது. கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா முதல்முறை சிஎஸ்கே அணியில் வெற்றியை ருசித்து இருக்கிறார்.

    முதல் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்புள்ள போட்டிகளில் கூட சிஎஸ்கே தோல்வி அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

    நேற்று போட்டி

    நேற்று போட்டி

    நேற்று நடந்த போட்டியில் டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் பேட்டிங் திணறியது. ருத்துராஜ், மொயின் அலி அடுத்தடுத்து அவுட்டான நிலையில் ஷிவம் துபே, உத்தப்பா இருவரும் அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் உத்தப்பா நேற்று வெறும் 50 பந்தில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி 88 ரன்கள் எடுத்து அசத்தினார்.

     ஷிவம் துபே

    ஷிவம் துபே

    இன்னொரு பக்கம் கடைசி பந்து வரை அதிரடி காட்டிய ஷிவம் துபே நேற்று 8 சிக்ஸ், 5 பவுண்டரி என்று 46 பந்தில் 95 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் சிஎஸ்கே அணி 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்தது. டு பிளசிஸ் வெறும் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீக்சனா பந்தில் அவுட்டானார். அதேபோல் அனுஜ் ராவத் தீக்சனா பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    நேற்று நடந்த போட்டியில் தீக்சனா மட்டும் 4 விக்கெட்டுகளை எடுத்தார். டு பிளசிஸ், அனுஜ் ராவத், சுயாஸ் பிரபு தேசாய், ஷாபாஸ் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தீக்சனா நேற்று எடுத்தார். நேற்று இந்த போட்டியில் முகேஷ் சவுத்திரி அடுத்தடுத்து கேட்ச்களை விட்டது பெரிய அளவில் சர்ச்சையானது. முதலில் சுயாஸ் கொடுத்த கேட்சை முகேஷ் முதலில் விட்டார். அதன்பின் சுயாஸ் அதிரடியாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

     தினேஷ் கார்த்திக்

    தினேஷ் கார்த்திக்

    அதன்பின் தினேஷ் கார்த்திக் கொடுத்த எளிமையான கேட்சை முகேஷ் மீண்டும் மிஸ் செய்தார். அதன்பின் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் பின்னர் முகேஷ் ஓவரிலேயே இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 23 ரன்கள் சென்றது. நேற்று மொத்த சிஎஸ்கே ரசிகர் பட்டாளமும் முகேஷ் மீது கோபத்தில் இருந்தது. என்ன முகேஷ் இப்படி ஆடுகிறார்.. இவரை எல்லாம் யார் அணியில் எடுத்தது என்று பலர் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதிலும் நெட்டிசன்கள் பலர் மிக கடுமையாக விமர்சனம் செய்தனர். மைதானத்தில் முகேஷ் பின்னால் இருந்த ரசிகர்களும் அவரை விமர்சித்தனர். இதனால் முகேஷ் முகம் வாடிப்போய் காணப்பட்டது. ஆனால் தோனியோ முகத்தில் எந்த விதமான கோபத்தையும் காட்டாமல் அமைதியாக சென்று முகேஷுக்கு அறிவுரை வழங்கினார். எந்த விதத்திலும் கோபம் அடையாமல் முகேஷ்க்கு அறிவுரை வழங்கினார்.

    அறிவுரை

    அறிவுரை

    தோனியின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. கடந்த குஜராத் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரே ஒரு கேட்ச் விட்ட காரணத்திற்காக முகமது ஷமியை மூத்த வீரர் என்றும் கூட பார்க்காமல் திட்டினார். ஆனால் தோனியோ இளம் வீரரை தட்டிக்கொடுத்து பாராட்டிய சம்பவம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதான் தோனி.. இப்படித்தான் மூத்த வீரர்கள் இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+