MEMES: நண்பர்களே இப்ப என்ன நடந்துச்சுனா.. அடிதாங்கி ஆர்சிபியை வெளுத்த சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வென்றதை வைத்து பலரும் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
Recommended Video
நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. முதல் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் இறங்கிய சென்னை அணி 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மீம்ஸ்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வென்றதை வைத்து பலரும் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
பொதுவாக ஒரு சீசனில் சிஎஸ்கே எவ்வளவு மோசமாக ஆடினாலும் கூட அந்த சீசனில் சிஎஸ்கே பெங்களூர் அணியை எளிதாக வென்றுவிடும். இது பல முறை நடந்து இருக்கிறது. சிஎஸ்கே அணியை பார்மிற்கு கொண்டு வருவதே பெங்களூர் அணிதான். அந்த வகையில் நேற்று மீண்டும் சிஎஸ்கே வென்றதை பலர் பாராட்டி வருகிறார்கள்.

கிண்டல்
சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களோடு பொதுவாக கோலி நெருக்கமாக இருப்பார். அதிலும் தோனியுடன் கோலி நெருக்கமாக இருப்பார். இதெல்லாம் போக இப்போது டு பிளசிஸ் வேறு பெங்களூர் அணியில் இருக்கிறார். இந்த பிணைப்பை வைத்து பலரும் இணையத்தில் கிண்டல் செய்து மீம் போட்டு வருகிறார்கள்.

சிஎஸ்கே வெற்றி
நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் டுபே சிறப்பாக ஆடினார். நேற்று போட்டியில் கடைசி பந்து வரை அதிரடி காட்டிய ஷிவம் துபே நேற்று 8 சிக்ஸ், 5 பவுண்டரி என்று 46 பந்தில் 95 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் சிஎஸ்கே அணி 216 ரன்கள் எடுத்தது. ஆனால் அவருக்கு பவுலிங் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் பவுலிங் அவர் மோசமாக செய்வார். முன்னதாக லக்னோவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய ஷிவம் துபே போட்ட 19வது ஓவர்தான் காரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த ஓவரில் மட்டுமே துபே மொத்தம் 25 ரன்கள் கொடுத்தார். இதை வைத்து பலர் மீம் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே மீம்ஸ்
சிஎஸ்கே, பெங்களூர் அணி இரண்டும் களத்தில் வைரிகளாக இருக்கலாம். ஆனால் களத்திற்கு வெளியே இரண்டு அணிகளும் நெருக்கமான நட்பு அணிகள்தான். அதிலும் நேற்று போட்டிக்கு முன்பாக பயிற்சியிலும் கூட இரண்டு அணி வீரர்களும் நெருக்கமாக இருந்து நட்பாக பேசிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் கூட வெளியானது. இதை வைத்து பலரும் மீம் போட்டு வருகிறார்கள்.

ஆர்சிபி மீம்ஸ்
நேற்று சிஎஸ்கே அணி வென்ற நிலையில் பெங்களூர் அணி ரசிகர்களை சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். ஏனென்றால் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே வரிசையாக நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருந்தது. இதை வைத்து சிஎஸ்கே ரசிகர்களை பெங்களூர் அணி ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே வென்றதும் பதிலுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் மீம் போட்டு கலாய்த்து வந்தனர்.

கிண்டல் கேலி
சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், பெங்களூர் அணி வீரர்களுக்கும் இருக்கும் உறவை வைத்து பலர் மீம் போட்டு வருகின்றனர். அதிலும் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக டு பிளசிஸ், கோலி இருவரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதை வைத்து பலர் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். சிங்கம் படத்தை வைத்து போடப்பட்ட இந்த மீம் வைரலாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications