உடைந்து.. கண்ணீர்விட்ட தோனி.. அன்று அழுதது ஏன்? சிஎஸ்கே புள்ளி வெளியிட்ட பரபரப்பு பின்னணி!
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கண்ணீர் விட்ட சம்பவம் ஒன்றை பற்றிய சுவாரசிய தகவல்களை பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி பகிர்ந்து உள்ளார்.
4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி 2022 ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. வரிசையாக பல்வேறு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்வதே சந்தேகம் ஆகியுள்ளது.
இதுவரை 10 போட்டிகளில் ஆடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. 4 முறை சாம்பியன் ஆன அணி இப்படி மோசமாக சொதப்புவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கேப்டன்
இந்த தொடரில் முதலில் கேப்டனாக 8 போட்டிகளில் ஜடேஜா இருந்தார். தற்போது கடந்த இரண்டு போட்டிகளாக மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் இரண்டு போட்டிகளில் ஒன்றில் சிஎஸ்கே அணி வென்றது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது,

ஹஸ்ஸி
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, கேப்டன் தோனி குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் சார்பாக ஹஸ்ஸி பேசும் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேப்டன் தோனி எப்போதும் முகத்தில் ரியாக்சன் காட்ட மாட்டார். ஆனால் 2018 சீசனுக்கு முன்பாக அவர் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் இரண்டு வருடமாக சிஎஸ்கேவிற்காக ஆட முடியவில்லை.

தோனி கண்ணீர்
நாங்கள் திரும்பி வந்தோம். மீண்டும் சிஎஸ்கே அணி ஆட தொடங்கியது 2018ல். அப்போது அணிக்கு மீண்டும் தோனி வந்ததும்.. அவர் சீசனுக்கு முன்பாக எமோஷனலாக பேசினார். அவர் உடைந்து அழுதார்.. அவர் ஒரு நொடியில் எங்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. எனக்கு இன்னமும் அந்த நாள் நினைவு இருக்கிறது. சிஎஸ்கே அணி எப்போதும் ஸ்பெஷல்தான்.
Recommended Video

தோனி எமோஷன்
அதனால்தான் எமோஷனலை காட்டாத தோனியே கூட அன்று கண்ணீர்விட்டார். இந்த அணியில் எதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்று ஹஸ்ஸி குறிப்பிட்டார். பொதுவாக தோனி பொதுவில் ரியாக்சனை காட்ட மாட்டார் என்றாலும் அன்று அவர் உணர்ச்சிவசப்பட்டது வைரலானது. இந்த வருஷம் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி எப்போதும் ஸ்பெஷல் அணி என்று ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications