நேற்று வந்த சின்ன பையனுக்காக.. சிஎஸ்கே துணிச்சலாக எடுத்த முடிவு.. தோனி தந்த சிக்னல்.. மாறும் டீம்!
சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே ரீ டெயின் செய்யும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு, ஆரவாரம் எல்லாம் இப்போதே தொடங்கிவிட்டது. ஐபிஎல் 2022 ஏலம் அடுத்த வருடம் ஜனவரி பிப்ரவரியில் நடக்க உள்ளது.
அதற்கு முன்பே இந்த முறை ரீ டெயின் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். அகமதாபாத், லக்னோ அணிகள் இந்த முறை ஐபிஎல்லில் ஆட உள்ளது. இதனால் மெகா ஏலம் நடக்க உள்ளது.

புதிய அணிகள்
சமநிலை கருதி இந்த இரண்டு புதிய அணிகளும் முன் கூட்டியே தலா 4 வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மற்ற அணிகள் எல்லாம் 4 வீரர்கள் வரை ரீ டெயின் செய்ய முடியும். இந்த முறை ஆர்டிஎம் கார்ட் இருக்காது என்பதால் ஏலத்தில் விடப்படும் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். எனவே ரீ டெயின் செய்யப்படும் வீரர்களை தவிர மற்ற வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது கடினம்.

சிஎஸ்கே
இந்த நிலையில் சிஎஸ்கே அணி இந்த முறை ரீ டெயின் செய்ய போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி தோனியை ரீ டெயின் செய்வது உறுதியாகி உள்ளது. கேப்டன் என்ற முறையிலும், அவரை ஏலம் விட கூடாது என்பதில் சிஎஸ்கே உறுதியாக இருப்பதாலும் தோனியை சிஎஸ்கே ரீ டெயின் செய்துள்ளது.

அணி
தோனி போக இன்னொரு பக்கம் ருத்துராஜ், ஜடேஜா, மொயின் அலி அல்லது சாம் கரண் ஆகியோரை சிஎஸ்கே ரீ டெயின் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மொயின் அலி (அல்லது சாம் கரண்), ஜடேஜா ஆகியோர் ஆல் ரவுண்டர்கள். இவர்களை ஏலத்தில் விட்டால் எடுப்பது கஷ்டம். அதிக விலைக்கு போக கூடியவர்கள். இதனால் இவர்களை சிஎஸ்கே வெளியே விட விருப்பம் இன்று ரீ டெயின் செய்துள்ளதாக தெரிகிறது.

ருத்துராஜ்
ருத்துராஜ் சிறப்பாக ஆடி வருவதால் அவரை ஏலத்தில் விட மனமின்றி அவரை ரீ டெயின் செய்ய சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. கடந்த 2 வருடமாக ருத்துராஜ் மிக சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் இவர்தான் டாப் ரன் ஸ்கோரர். இதனால் ருத்துராஜை சிஎஸ்கே ரீ டெயின் செய்யும் முடிவில் இருக்கிறது. அணியில் ரெய்னா, டு பிளசிஸ், ராயுடு போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்கு பதிலாக சிஎஸ்கே ருத்துராஜை ரீ டெயின் செய்துள்ளது.

சிஎஸ்கே ரீ டெயின் பாலிசி
இது தோனியும், சிஎஸ்கேவும் கொடுத்த கிளியர் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி சிஎஸ்கேவின் கோர் டீம் மொத்தமாக மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. சிஎஸ்கேவின் துணிச்சலான முடிவாக இது பார்க்கப்படுகிறது. மூத்த வீரர்களை அனுப்பிவிட்டு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. சிஎஸ்கேவின் முகம் டாடி ஆர்மி என்பதில் இருந்து யங் ஆர்மி என்று மாறுகிறதோ என்ற கேள்விகள் எழ தொடங்கி உள்ளன.

ரெய்னா
ரெய்னா, டு பிளசிஸ் போன்ற வீரர்கள் சிஎஸ்கேவில் குடும்பம் போல இருந்தவர்கள். அவர்களை ரீ டெயின் செய்யாமல் சிஎஸ்கே ருத்துவை எடுப்பது மிகப்பெரிய மாற்றம் ஆகும். சிஎஸ்கே இதனால் அடுத்த இன்னிங்க்ஸுக்கு தயார்ஆகிவிட்டது . அடுத்த 10 ஆண்டுகள் அணியை வழி நடத்தும் வீரர்களை தேர்வு செய்ய தொடங்கிவிட்டது என்றே கருதப்படுகிறது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications