எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எஸ்பி அந்தஸ்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 8 எஸ்பிக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* விருதுநகர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள கண்ணன், சென்னை நகர காவல் நலன் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகப்பட்டினம் எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள பாலகிருஷ்ணன், சென்னை தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கரூர் எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள ஜோஷ் தங்கையா, சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஈரோடு எஸ்பியாக பணியாற்றி காத்திருப்பு பட்டியலுக்கு சென்ற சுஜாதா சென்னை தலைமையக பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* எஸ்பி அந்தஸ்தில் பொறுப்புக்கு காத்திருந்த சண்முகம், சென்னை சிஐடி 'க்யூ' பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ராஜாராஜ், சென்னை தெற்கு மண்டல லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மாதவன், சென்னை சிஐடி கிரைம் பிரிவின் எஸ்பியாக செயல்பட உள்ளார்.
* காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அனிதா, சென்னையில் நவீனமயமாக்கல் பிரிவின் எஸ்பி உதவி இன்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications