படத்திற்கான விடை என்ன? ரொம்பவே ஈசி தான்! ஆனாலும் பலராலும் கண்டுபிடிக்க முடியல
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் பறவை, பன்றி, முயல் ஆகிய மூன்று உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தில் உள்ளவாறு புதிர் இருக்கையில் மொத்த உயிரினங்களின் எடை எவ்வளவு என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் போலவே புதிர் படங்களும் நம் மூளைக்கு வேலை கொடுப்பவை. பார்ப்பதற்கு கஷ்டமாக தெரிந்தாலும் இதற்கான விடையை கண்டுபிடிக்க சின்ன ட்ரிக்சை யூஷ் செய்தாலே விடையை கண்டுபிடித்துவிட முடியும். அந்த வகையில் தான் இன்று புதிர் படம் இணையத்தில் வட்டமிட்டு வருகிறது.

இந்த ஆப்டிகல் புதிர் படத்தில் மொத்தம் மூன்று உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பன்றி, பறவை, முயல் ஆகிய மூன்று உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தில் சில சமன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்துக்கொண்டு, உயிரினங்களின் மொத்த எடை என்ன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
கணக்கில் புலி என்றால் நீங்கள் இந்த புதிருக்கான விடையை ஐந்தே செகண்டில் கண்டுபிடித்து விடுவீர்கள். இதே போல் அரசு வேலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களும் இதற்கான விடையை 5 செகண்டில் கண்டுபிடித்து விடுவர். மற்றவர்களுக்கு புதிருக்கான விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் போல் தெரிந்தாலும் பார்முலாவை அல்லது சின்ன ட்ரிக்சை பயன்படுத்தினால் விடையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சரி உங்களுக்கான 10 செகண்ட் நேரம் தொடங்கியது. குறிப்பிட்ட 10 செகண்டிற்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். இந்த புதிருக்கான விடையை கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள் கணித பார்முலாவை பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள். விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போதும் முடியவில்லையே என்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லி விடுகிறோம். இந்த புதிர்கான விடை என்பது 105 என்பதே சரியானதாகும். அதாவது ( முயல் - 4, பன்றி - 100, பறவை - 1) ஆகும்.
சரி இது எப்படி வந்தது என்பதை பார்க்கலாம். முதலில் படத்தில் உள்ள 3வது சமன்பாட்டை பார்க்கலாம். அதில் 3 முயல்களின் எடை 12 என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு முயலின் எடை 4 என்று கிடைக்கும். எனவே முயலின் எடை 4 கிலோ என்பதை முதலில் கண்டுபிடித்துவிட்டோம். பின்னர் இதனை முதல் சமன்பாட்டில் போட்டோம் என்றால், பறவையின் எடை 1 என்று கிடைக்கும். அதாவது முயல் + பறவை = 5 என்று உள்ளது.

இதில் முயலின் எடை 4 கிலோ என்றால் பறவையின் எடை நமக்கு ஒன்று என கிடைக்கும். இப்போது நமக்கு பறவை மற்றும் முயலின் எடை தெரிந்துவிட்டது. இதை வைத்து 2 வது சமன்பாட்டில் நாம் பன்றியின் எடை 100 கிலோ என்பதை கண்டுபிடித்து விடலாம். அதாவது பன்றியின் எடை - பறவையின் எடை = 99 என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 100 - 1 = 99. இதனை கடைசி சமன்பாட்டில் போட்டோம் என்றால் அதாவது பன்றி + பறவை + முயல் = 100 + 1 + 4 = 105 என்பதே படத்திற்கான விடை ஆகும்.












Click it and Unblock the Notifications