விடவே விடாதீங்க! சிக்கலாகிடும்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் அனுப்பிய வார்னிங்! இஸ்ரேலுக்கு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு ஈரான் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் விரைவில் ஈரானுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.

israel palestine israel palestine war international

இப்போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவும் கூட.. வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் வார்னிங் கொடுத்து உள்ளது உங்களிடையே வான்வெளியை, தரைவழியை விமான தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்த அனுமதிக்க கூடாது. அதை மீறினால்.. உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம். ஈரான் கடுமையான நடவடிக்கையை எடுக்கும், என்று எச்சரித்து உள்ளது.

மோதல் உச்சம்: இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் மோதலில் அடுத்த 1 வாரம் மிக முக்கியமான வாரமாக மாறி உள்ளது. இரண்டு தரப்பு மோதலில் அடுத்த 1 வாரம் பல்வேறு சுவாரசியமான, அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

உளவு அமைப்புகள்: தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+