சென்னையை அதிரவைத்த இரானி கொள்ளையன் சல்மானை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! 19 வழக்குகள் பெண்டிங்
சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இரானி கொள்ளையன் சல்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சல்மானை ஏப்ரல் 9 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இரானி கொள்ளையர்களை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஜாஃபர் குலாம் என்பவர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு கொள்ளையன் விசாரணை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 7.10 மணிக்குள் சைதாப்பேட்டை, சாஸ்திரி நகர், திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரியில் மொத்தம் 6 இடங்களில் 6 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து செயின் பறிக்கப்பட்டது. திருவான்மியூரில் செயின் பறிப்பின்போது படுகாயம் அடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் தலைநகரை பதற வைத்தன.
இதையடுத்து, செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறித் தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது. கொள்ளையர்கள் விமான நிலையம் நோக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அலர்ட் செய்யப்பட்டது.
அதன்படியே, சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20) ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் விஜயவாடாவுக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்ப முயன்ற சல்மான் உசேன் இரானி (32) போலீசாரால் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானி, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் மேஷம் இரானி ஆகியோர் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ரயிலில் பிடிபட்ட கொள்ளையன் சல்மான் உசேன் இரானி கர்நாடக மாநிலம் விகார் பகுதியைச் சேர்ந்தவர். மூவரும் இரானி கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்கள் பறித்த நகைகள், செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்பதற்காக 3 பேரையும் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தரமணி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ஜாபர் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 முறை சுட்டார். இதையடுத்து, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரானி கொள்ளையன் சல்மானுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications