“புலன் விசாரணை நடந்து வருவதால் மீனவர் உடலை கொண்டுவருவதில் தாமதம்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புலன் விசாரணை நடந்து வருவதால் ஈரானிய கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தூதரக நடவடிக்கையை அயலக நலத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு கவன ஈர்ப்பு தீர்மானங்களை அவை முன்பு கொண்டு வந்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சவுதியில் அரபியாவில் தங்கி மீன் பிடிக்கும் வேலை செய்து வந்தனர். தமிழக மீனவர்கள் ஈரானிய கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதில் மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துவிட்டார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Iranian Pirates Kill Tamil Fisherman Aadhav Arjuna Says Body Repatriation Delayed Amid Probe

அடுத்ததாக, சென்னை காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது எனக் கூறி ஆந்திரா அதிகாரிகள் 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, 80 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை முன்வைத்து, இந்த பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

சவுதியில் தமிழக மீனவர்கள் ஈரானிய கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் மீது அரசின் நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார் மற்றும் தளி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பினர். திமுக உறுப்பினர் எ.வ.வேலு, அவசரம் கருதியே சில பிரச்சனைகளை எழுப்புவதாகவும், அதை சிறப்பு கவன ஈர்ப்பு என்ற அடிப்படையில் கட்டாயம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையே மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மயிலாடுதுறையை சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகியோர் கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு மீன்பிடிக்க சென்றபோது, கடற்கொள்ளையர்கள் தாக்கியதால், தங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு கடற்கொள்ளையர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் மீனவர்களை சுட்டனர். இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் இறந்த மாவீரனின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மீன்வளத்துறை அமைச்சர் இறந்தவர்களின் உடலையும் காயமடைந்தவர்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக தூதரக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்" எனப் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+