“REGRET” ”ERROR" ரெண்டே வார்த்தையில் சோலி முடிக்கும் ஐஆர்சிடிசி! ரயில் டிக்கெட் முன்பதிவு கனவு தானா?
சென்னை: ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஐஆர்சிடிசி எடுத்துள்ளது. இருந்தபோதும் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது பொதுமக்கள் சிரமத்தை சந்திப்பதாக புகார் எழுந்திருக்கிறது. சட்டவிரோத இணையதளங்கள் மூலம் ரயில் டிக்கெட்டை ஏஜென்ட்கள் மொத்தமாக புக் செய்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வம் கொண்ட மக்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அடிக்கடி ஏமாற்றத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டுக்கான தீபாவளி முன்பதிவு ஆரம்பித்தவுடன், சில நிமிடங்களுக்குள்ளேயே அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து "REGRET" என்ற வார்த்தை திரையில் தெரிந்தது.
இதனால், ஏழை எளிய மக்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்தில் சிக்கியுள்ளனர். சாதாரணமாக, ரயில்வே டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே துவங்குகிறது. அதற்காக பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் காலை 8 மணிக்கு தயாராக காத்திருக்கின்றனர்.

ஐஆர்சிடிசி
பயண விவரங்கள் முன்கூட்டியே சேமிக்கப்பட்டு, யுபிஐ, இ-வாலட் போன்ற விரைவு கட்டண முறைகள் பயன்படுத்தப்பட்டாலும், 8.01 மணிக்கே சிலர் பணம் செலுத்திவிடுகிறார்கள். ஆனால், 8.03-8.04 மணிக்குள் "டிக்கெட் கிடைக்கவில்லை" அல்லது "ரெக்ரெட்" என்ற பதில் தான் கிடைக்கிறது. சில நாட்களில், IRCTC இணையதளம் திறக்கவே இல்லை என புகார் சொல்கின்றனர். சில நேரங்களில் லாகின் செய்தவுடன் மீண்டும் வெளியேறிவிடுகிறது. பணம் பிடித்துக் கொண்ட பிறகு "processing" என்று காட்டி, பின்னர் "error" எனும் செய்தியோடு முடிவடைகிறது.
முன்பதிவு சிக்கல்
பயணிகள், "செயலி தான் சரியாக இயங்கவில்லை; அதனால் தான் டிக்கெட் கிடைப்பதில் பிரச்னை" என்று குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே பிரச்சினை தொடர்கிறது. பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கூட பண்டிகை ரயில்கள் சில நிமிடங்களுக்குள்ளேயே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத மென்பொருள் செயலிகள் மூலம் ஏஜெண்டுகள் டிக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்கள் என்பதே பொதுமக்கள் சந்தேகம்.
மத்திய ரயில்வே
மத்திய ரயில்வே அமைச்சகம், போலி கணக்குகளை நீக்கும் நடவடிக்கைகள், ஆதார் சரிபார்ப்பு, ஏஜெண்டுகளுக்கான கட்டுப்பாடுகள் என பல விதிகளை அறிவித்திருந்தாலும், பயணிகளின் அனுபவத்தில் பெரிய மாற்றமே தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய ரயில்வே பெருமையாக அறிவிக்கிறது. ஆனால் அந்த சிறப்பு ரயில்களின் அறிவிப்பு கடைசி நேரத்தில் மட்டுமே வெளிவருகிறது. மேலும், அந்த ரயில்கள் சாதாரண அதிவிரைவு ரயில்களைப் போலவே வேகமாக செல்லாமல், கூடுதல் நேரம் எடுக்கின்றன என்பது பயணிகளின் குறை.
ரயில்வே பிரச்சனை
"ரயில் டிக்கெட் முன்பதிவு ஏஜெண்டுகளுக்கும், பெரியவர்களுக்கும் மாத்திரமே சாத்தியமாகிறது. சாதாரண மக்கள், சிறிய குடும்பங்கள், முதியவர்கள் - யாரும் டிக்கெட் எடுக்க முடியாத நிலை. ரயில்வே அமைச்சகம் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டிக்கெட் ஏமாற்றம்
பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில் இருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். "சரியான நேரத்தில் முன்பதிவு செய்தாலும் டிக்கெட் கிடைக்கவில்லை" என்ற இந்த பிரச்சினைக்கு ரயில்வே துறை உடனடியாக தீர்வு காணுமா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக மாறியுள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications