IRCTC down: திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் போட முடியாமல் கதறும் பொதுமக்கள்!
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லப் பொதுமக்கள் பலரும் இன்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றனர். இருப்பினும், திடீரென ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டிக்கெட் புக் செய்ய முயன்றால் error என வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என லாங் வீக் எண்டாக இருக்கிறது. மேலும், பெரும்பாலான ஐடி துறை ஊழியர்களும் இந்தக் காலகட்டம் விடுமுறையாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் இந்த லாங் வீக் எண்டை கொண்டாடச் சொந்த ஊர் செல்கிறார்கள்.

நாளை மறுநாள் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், நாளை ரயில்களில் தட்கல் டிக்கெட் புக் செய்யப் பொதுமக்கள் தயாராக இருந்தனர். இருப்பினும், ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
தட்கல் டிக்கெட் ஓபன் ஆனபோது டிக்கெட்களை புக் செய்ய முடியவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். சொந்த ஊர் செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர். தட்கல் டிக்கெட் புக் செய்ய முயலும்போது error என்று மட்டுமே காட்டுவதாகப் புகார் தெரிவித்தனர்.
சுமார் 10 நிமிடங்களுக்கு இதுபோல ஐஆர்சிடிசி தளம் முடங்கியதாம். அதன் பிறகே செயல்பட ஆரம்பித்துள்ளது. இருப்பினும், அதற்குள் அனைத்து டிக்கெட்களும் புக் ஆகிவிட்டதாகவும் இடைத்தரகர்களே டிக்கெட்களை அதிகம் புக் செய்வதாகவும் பொதுமக்கள் இணையத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications