மெடிக்கல் இன்சூரன்ஸ்! கிளைம் கேட்டால் ஒரு மணிநேரத்தில் செட்டில்மென்ட் செய்ய வேண்டும்! அதிரடி உத்தரவு
சென்னை: மருத்துவ ரீதியான இன்சூரன்ஸ் எடுத்தவர்களுக்கு அதற்கான பாலிசி தொகையை 1 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆவணங்களை சமர்ப்பித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பாலிசிதாரர் அக்கவுண்டில் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது . இன்சூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Idai) புதன்கிழமையன்று உடல்நலக் காப்பீடு குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. காப்பீட்டாளர் பணம் வேண்டி கோரிக்கை வைத்த பின் ஒரு மணி நேரத்திற்குள் பணம் கொடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. ஆவணங்களை சோதனை செய்த பின் 1 மணி நேரத்திற்குள் சோதனை செய்ய வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்த ஜூலை 31, 2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஜூலை 31, 2024க்குள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, சுகாதார காப்பீட்டு பாலிசி வைத்திருப்பவர்கள், மூலம் முந்தைய ஆண்டில் எந்த claim கோரிக்கையும் செய்யப்படாவிட்டால், புதிதாக அடுத்த வருடத்தில் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது கடந்த வருடம் நீங்கள் எந்த claim கோரிக்கையும் செய்யவில்லை என்றால் இந்த வருடம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெற முடியும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்சமயம், கடந்த வருடம் நீங்கள் எந்த claim கோரிக்கையும் செய்யவில்லை என்றால் இந்த வருடம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறும் வசதி தற்போது இல்லை. இதுவரை பாலிசிதாரர்களுக்கு க்ளைம் போனஸ் வழங்கப்படுவதில்லை.
இனி நேற்று முதல் புதிய விதி அமலுக்கு வரும். பாலிசிதாரர்கள் புதுப்பித்தலின் போது காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது அல்லது பிரீமியத்தில் தள்ளுபடி செய்வது ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்வதற்கான விருப்பம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Idai) தெரிவித்துள்ளது.
ஆனால் இது மெடிக்கல் இன்சூரன்சுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற இன்சூரன்சுக்கு பொருந்தாது. மோட்டார் காப்பீட்டிற்கு, பாலிசிதாரர்களுக்கு க்ளைம் போனஸ் புதுப்பித்தல், பிரீமியத்தில் தள்ளுபடி வழங்குதல் போன்ற சலுகைகள் தரப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications